பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 153 முந்நூற்று அறுபத்தைந்து தடவை பாய்ந்தால் ஒரு ஒளியாண்டு. கிலோ மீட்டர் கணக்கில் டென் டு தி பவர் ஆப்." "வேண்டாம் ஸார். நினைத்தே பார்க்க முடியல." "ஒளி வேகத்தைவிட மனோவேகம் வேகமானது. அப்படிப்பட்ட மனதாலும் அளப்பரியது பிரபஞ்சம். இதில் காலத்துளியும், தூரத்துளியும் ஒன்றாகின்றன. அதோ தெரியுதே நட்சத்திரம். அதன் தோற்றம் ஒரு மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன்பிருந்த தோற்றம். கோடி கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய மண்டலங்கள்.... அவற்றை மடியில் தாலாட்டும் கோடானுகோடி மண்டல அடுக்குகள். இப்படி அனந்தகோடி அண்ட அடுக்குகளை கொண்டது பிரபஞ்சம். அதற்குப் பிறகு சூன்யம். இப்போது எங்களுக்கு தெரிய வருவது, இப்படி கோடிக் கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று. கோளங்கள் நட்சத்திரங்களைச் சுற்றி, தத்தம் வகிடுகளில் சுழல்கின்றன. இங்கே ஒன்றித்துப் போன காலமும் தூரமும் அற்றுப்போகின்றன. காலம், மகாகாலம், சூனியத்தில் காலாவதியாகிறது. எப்போது காலத்தைக் கணக்குச் சிறையில் பூட்டாமல் இருக்கோமோ, அப்போதுதான் ஒருத்தருக்கு மெய்யான விடுதலை கிடைக்கும். "நாம், காலத்தை கிழமைகளாக்கி, நிமிடங்களாக்கி, நிமிடங்களை விநாடிகளாக்கி காலச்சிறையில் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கிறோம். காலமற்ற நினைவே சித்து. நினைவற்ற காலமே ஞானம். இதை ஆராதிப்பதே, சித்தி, புத்தி, பக்தி ஆகியவற்றை கடந்த நித்தியம்." "சாமி. இதுக்குமேலே என்னால தாங்காது. என் பக்தி ஒரு மூடபக்தி"