பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 155 அவரை நம்பியவருக்கு சொர்க்கமாம். நம்பாதவர் க்கு நரகமாம். ஒங்க வேள்வித்தீயோ மெழுகுவர்த்தியோ ஒரு விநாடியின் கோடிப்பிரமாண ஒளிப்பாய்ச்சலுக்கு நிகராகுமா?. மகாவிஷ்ணு கருடனில் பறக்காராம். அவர் மருமகன் மயிலில் ஏறுகிறாராம். மருமகனோட அப்பனுக்கும், ரெண்டு பொண்டாட்டிங் களாம். இவங்க நம்ம கடவுள்களாம். வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? சொல்லுங்க.." "நான் எதையும் சொல்றாப்போல இல்ல. நான் என்ன செய்யணுமுன்னு சொல்லுங்க" "பொய்க் கடவுள்களை விடுங்க. மனிதன் படைத்த கடவுள்களையும், அவர்களின் வாகனங்களையும், சிலுவையையும், பிறைநிலாவையும், திரிசூலத்தையும், உதறுங்கள். பிரபஞ்சத்தை ஆராதிங்க. கோடிக்கணக்கான நட்சத்திரங்களுக்கு இடையே உலா வாங்க, பசுமாட்டை வணங்காமல், பால்வழி மண்டலத்தை பாடுங்கள். பிரபஞ்ச ஆலயத்தின் அனந்தங் கோடி ஒளிப் பிரகாசத்தில் ஒரு ஒற்றை அகல்விளக்காய் ஒளிருங்கள். அப்போது பக்தியால் தரிசான மனோ நிலத்தில் ஞானம் விளையும். சரி சாப்பாடு ரெடி வாங்க. அறைக்குள்ளே போகலாம்." பொன்னம்பலம், அந்த ஆகாயக் கணக்கரை, ஒரு மனிதராகப் பார்க்காமல், மகாத்மாவாகப் பார்த்தார். ஒருவேளை கிரகத்தின் சித்தரோ. புத்தரோ. வித்தரேர். எவரோ. வித்தியாசமானவர். பொன்னம்பலம் அங்கேயே திருநீறை அழித்தார். வரும் வழியில் திருவாலங்காய் என்ற சிவதலத்தில் பூசியது. அந்த விபூதியை அழித்த கரங்களை, ஆகாயத்தை நோக்கித் தூக்கியபடியே, பிரபஞ்சக் காலடியைக் கும்பிட்டார். மறுபிறவி எடுக்க, மரிக்காமலே புதுப்பிறவி எடுத்தார். எடுத்ததாக நினைத்தார்.