பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. பனிப்போர் தலையையும் படுக்கையில் மறைத்து குப்புறக் கிடக்கிறாள் பாவாடை தாவணியானாலும், சர்வார்கமிஷானாலும் சரி, தன்னாலேயே அவை அழகுபடுகின்றன என்ற தோரணை காட்டும் அவள், இப்போது இரு கண்களிலும் ஊளை பிரள, உதட்டோரங்களின் இரு பக்கமும் எச்சில் கோடுகள் செதில் செதிலாக அருவருப்பாய் கிடக்கிறாள் அவள் பக்கத்துப் படுக்கையில் படுத்திருக்கும் எனது மகன் முள்ளம்பன்றி மாதிரி உடம்பைச் சுருக்கிக் கொண்டு கிடக்கிறான். மூக்கு ஒழுகிறது. ஏறும்போதும் இறங்கும் போதும் ஒவ்வொரு படியாய் துள்ளிக் குதிக்கும் என் மகன் பல திரைப் படங்களைப் பார்த்ததாலோ என்னவோ, ஸ்லோமோஷனில் ஒடுவது போல் நடந்தும், நடப்பது போல் ஒடியும் அழகு காட்டும், என் மகனை இந்தக் தூக்கம் இப்படி தற்காலிக பிணமாக்கிவிட்டது. என்னால் தாள முடியவில்லை. அவர்களை எழுப்பி விடப்போனேன். மகள், மகனையும், மகன் மகளையும் தூக்கத் தொல்லைகளாக நினைத்து கண்களை மூடிக் கொண்டே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க மனமில்லாமல், வெளியே பால்கனி பக்கம் வந்தேன். மார்பளவு உயர்ந்த இரும்பு கிராதிகளின் மேல் உடம்பு வளைத்துப் போட்டுக் கொண்டு அந்த தெருவை கீழ் நோக்கி பார்த்தேன். ஒரே இருள் மயம் தெருவோர கார்ப்பரேஷன் விளக்குகள் எலும்புக்கூட்டிற்கு மேல் கண்ணாடித் தோல் போர்த்தப் பட்டு லேசு லேசான வெள்ளையாய் தோன்றின. ஆனாலும், அவற்றையும் தூக்கம் பிடித்துக் கொண்டது. உள்ளே ஒளியில்லை. வெளியே வியாபித்த இருட்டுக்கு அது பயந்து விட்டது. எல்லாம் இந்தத் தூக்கமே காரணம். தூங்காமைதான் ஆன்மாவுக்கு அழகு சேர்ப்பது. எனக் ஏனோ அங்கு நிலவிய இருள் பிடித்தது. இருளா அல்லது இருட்டா? இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. பகலின் நிழல், இருள்; சூரியனின் சடலம் இருட்டு, எதுவோ. எனக்கு இந்த இருள் பிடிக்கிறது. இந்த