பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


158 வீட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். ஆனால் அந்தக் கோட்டை வைத்துத்தானே பயன்பாட்டு விஞ்ஞானம் உருவாயிற்று. அதனால்தான் நீங்க இந்தப் படங்களை எடுக்க வேண்டிய அவசியமில்ல. இப்போது இருப்பது போலவே நீங்க ஒரு ஆத்திக நாத்திகராய் இருந்தாலே போதும்.' பொன்னம்பலம், மனைவியை மார்புடன் ஆரத் தழுவுகிறான். அவளோ, தன் பள்ளிக்கூடத்து மாணவனைப்போல், அவரை பெருமிதத்துடன் பார்க்கிறாள். பின்னர், அவர் நிலைக்கு இறங்கியவள், தன் நிலைக்கு ஏறிக் கொள்கிறான். ஆனாலும் வாஞ்சையோடு சொல்கிறாள். "சரி. பழைய பூக்களை எடுங்க. நான். கொல்லைப்புறம் போய், ஒங்களுக்காக. பூக்களை பறிச்சுட்டு வாரேன்.' கோலவடிவு, புதிதாய், முதல் தடவையாக பூக் கொய்யச் செல்லும் செயல்பாட்டைப் பற்றிக் கூட மனம் உள் வாங்காமல், பொன்னம்பலம், அந்தப் படங்களை கூச்சத்தோடு பார்க்கிறார். அவற்றின் மாறாத புன்னகை கண்டு, இவர் விம்முகிறார். ஏங்கி ஏங்கி அழுகிறார். அழுதபடியே, கைதுக்குகிறார். செங்குத்தாக தூக்குகிறார். சதங்கை - 1998