உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

161


சுற்றிச்சுற்றி வரும் என் மகளையோ, இந்த இரண்டு காகங்களும் சிநேகிதமாய்த்தான் பார்க்கின்றன. இவர்களையாவது தெரிந்த முகங்கள் என்று, அவை நட்பு பாராட்டுவதாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், முன் பின் முகமறியாத என் மைத்துனன் ஊரில் இருந்து வந்திருக்கிறான். வயிறு முன்னோக்கியும், கால்கள் பின்னோக்கியும் போனவன். கழுகை நவீனமாக வரைந்து அதற்கு 'முத்து' என்று பெயரிடலாம். அந்தமுத்து இந்த மாடிக்கு பல தடவை வருகிறான்; போகிறான். அவனையும் இந்த காகங்கள் கண்டு கொள்வதில்லை. குறைந்த பட்சம், ஒரு கத்துக்கத்தி எச்சரிக்கைக்கூட விடுப்பதில்லை. அப்படியானால் இந்த காக்காக்களுக்கு இளைத்துப் போன கோழிக்குஞ்சு நான் மட்டுந்தானா..?

காக்காக்களுக்கு மட்டுமல்ல. இந்த காக்கா மூலமாய் குடும்பத்திற்கும் இளைத்துப் போய்விட்டேன். நீங்க கறுப்பா இருக்கிகளா.... போதாக்குறைக்கு இரண்டு கைகளையும் வளைத்து இடுப்புல கொசுவத்த சொருகுகிறமாதிரி சொருகுகிறீகளா அதனால, உங்கள, குஞ்சுகள பிடித்துத் தின்ன வந்த ராட்சச பறவையா நம்ம வீட்டு காகங்க நினைக்குதுங்க” என்று அவள் கைதட்டிச் சிரிக்கிறாள். அது என்ன நம்ம வீட்டுக் காகங்கள்? என் மகன் என்னடாவேன்றால், அவன் தொலைக்காட்சியில் ஆட்டம் போடுவதற்கு ஆடையலங்காரம் செய்ய பணம் கொடுக்காததை மனதில் வைத்துக் கொண்டு, 'காக்கா இருக்கிறத பகிர்ந்து கொள்ளும் பறவை. அதுக்கு கஞ்சர்களை பிடிக்காது’ என்கிறான். நல்ல வேளை. இர் போட்டுப் பேசினானே. இவன் கிடக்கட்டும். என் மைத்துனன் ஊருக்குப் போனதும் என்னோட ஆபீஸர் அத்தானை காக்காய்ங்க காலால அடிச்சு வாயால கொத்துதுக' என்று எதுகை மோனையாய் பிரச்சாரம் செய்யப்போகிறான். இந்த விளையாட்டுப் பேச்சு, என் மகளுக்காக நான் மேற்கொண்டிருக்கும் மாப்பிள்ளை வேட்டைக்கு குந்தகமாயிடும். காக்கா அடிப்பது