பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 163 கோபங்கோபமாய் நிமிர்ந்து பார்த்தேன். எதிர் வீட்டு மண்தளத்தில் முளைத்து, இந்த மாடிக்குள் எட்டிப் பார்க்கும் மாமரக்கிளையின் ஒரு கொப்பில், அப்பா காக்காவோ, அம்மா காக்காவோ ஆடியும் ஆட்டுவித்தும் என்னை ஒரம் கட்டி பார்க்கிறது. இன்னொன்றோ, என் வீட்டுத் தென்னைமர உச்சியில், அம்பாய் வளைந்த ஒரு ஒலையை இரண்டாய் வகிடெடுக்கும் மஞ்சள் மட்டையில் கால்களை இடுக்கிபடியே இந்த குட்டுப் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிற பாணியில் பார்க்கிறது. நான் அதிர்ச்சியுற்று நிற்கிறேன். அந்தத் தென்னையை நெருங்காமல், மாடிப்படிகளிடம் போக முடியாது, வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால், நான் ஒரே ஒட்டமாய் ஓடி, மாடிச் சுவர் முகப்பிற்கு மகுடம் போலான கம்பிச்சுருள் விளக்கில் கைபதித்து, கீழே ஒரே தாவாய்த் தாவினேன். அதற்குள் இன்னொரு அடி. நெத்தியடி என்பார்களே. நிசமாவே அதுதான். நடந்ததையும் - இப்படி நடக்கப்போவதையும் காக்காமயமான என் சிந்தனையில் திணித்தபடியே, நான் நடந்து கொண்டே போனேன். பழைய மாம்மல்லபுரச் சாலைக்கு வந்து விட்டேன். அந்தச் சாலையின் ஒரு பக்கம் வெட்டிப்போட்ட பள்ளங்களும், கொட்டிப்போட்ட மேடுகளும், பொதுப் பணித்துறையின் கூடாரங்களுமாய் ஒரு பாலைவனம் ஏற்பட்டிருந்தது. மறுபக்கமோ, பச்சை முக்காடு போட்ட அசோக மரங்களும் இருபக்கமும் கிளைகளை வில்லாய் வளைத்துப் பிடித்த வாகை மரங்களும், நாகலிங்க பூக்களை உதிர்க்கும் மரங்களுமாய் சாலை பசுஞ்சோலையாய் திகழ்ந்தது: இவற்றின் நிழல் குடையில் நடந்து ஒரு வளைவிற்கு வந்தேன். அதன் ஒரத்தில் ஒரு வேப்ப மரம். சாலை ம்றியல் செய்யப்போவது போன்ற தாவரக் குண்டன். இதன் உச்சியில் கவுணாய் வளைந்த இரட்டைக் கிளையின் மூலக்