பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

764 ஒன்றிப்பு குகையில் ஒரு கூடு. ஏழை வீட்டு குச்சி வீடு மாதிரி. இதன் ஒரு கிளையின் உச்சியில் ஒரு காகம் பரமசாதுவாய் கால் கவ்வி கிடந்தது. எப்படியோ என்னை பார்த்து விட்டது. நானும் அதைப் பார்த்து விட்டேன். அது எப்படி எழுந்ததோ.. எம்பிப் பறந்ததோ. தெரியாது. என் தலையில் இரும்புக் கம்பியான அதன் கால்கள் தடம் பதித்தன. அடித்தது வவிக்கும் முன்பே, அந்தக் காகம் எப்படிப் பறந்தது என்பதும் தெரியவில்லை. ஏறிட்டுப் பார்த்தால் ஒரு டெலிபோன் கம்பத்தில் குந்தியபடியே மீண்டும் என்னை குறிபார்க்கிறது. என் ஆச்சரியம், அதிர்ச்சியானது. வீட்டுக் காகங்களாவது என்னை தாக்குவதில் ஒரு நியாயம் இருக்கலாம். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த காக்கா தாக்குவது அசல் அநியாயம். அதோ ஒருத்தர் கைகளை வீசிப்போட்டு நடக்கிறார். எதிர்ப்படும் சைக்கிளுக்கு எந்தப் பக்கம் வழிவிடுவது என்று புரியாமல், பழுத்துப்போன ஒரு மூதாட்டி அசல் பெண்குவின் பறவை போல் காலாட்டி கையாட்டி தள்ளாடித் தள்ளாடி நடக்கிறாள். ஒரு வாலிபன், அந்த வேப்பமரத் துணில் முதுகைச் சாய்த்து, இருபக்கக் கிளைகளிலும் கை விரித்து சிலுவையில் அறையப்பட்டவன் போல், யாருக்கோ, எவளுக்கோ வழிமேல் விழிபோட்டுக் சாய்ந்து கிடக்கிறான். கட்டிடத் தொழிலாளர்கள் சரம்சரமாய் போகிறார்கள். வீட்டுக்கார வேலைப்பெண்கள், ஐந்தாறு காக்கா குஞ்சுகளை உள்வாங்கும் தூக்குப் பைகளோடு போகிறார்கள். வருகிறார்கள். அந்த வேம்பின் அடிவாரத்தில் நிறுத்தப்பட்ட ஒரு டிரக்கு வண்டியில் காக்கி டவுசர் போட்ட ஒரு நடுத்தர வயது ஆசாமி, ஒருச்சாய்த்து படுத்திருக்கிறார். இந்த காகத்திற்கு இவர்கள் எதிரியாகத் தெரியவில்லை. நான் மட்டுந்தான் இதற்கு எதிரியாம். ஒருவேளை, இது, என்