பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 5 இருளுக்குள் ஒரு ஒளியைக் காண்கிறேன். நான் தூங்கமாட்டேன். நாம் ஏன் தூங்கக்கூடாது? அசையும் பொருள், அசையாப் பொருள் அத்தனையும் தூங்கும் போது, எதிரே உள்ள வீடுகளை முழுமையாக மறைத்து இருள் மயமாய் தோன்றும் தாவர சங்கமம் அசையும் நிலையிலிருந்து அசையா நிலைக்குச் சென்று துரங்கும் போது, நான் ஏன் தூங்கக்கூடாது? ஏனோ? எதுவோ? நான் லேசாய் பயந்து போனேன். ஆனாலும் 'தூங்காதே, தூங்காதே' என்று என்னுள்ளே ஏதோ ஒன்று சொல்லச் சொல்ல, நானும் எனக்குள்ளே அப்படி திருப்பிச் சொல்லிக் கொண்டேன். கண்களைத் திறந்து வைத்து தூக்கத்தை வழிமறித்தேன். அந்த அந்தகார இருளில், நிசப்தமே சப்தமாகியது. புறத்தில் ஏற்பட்ட அசைவின்மை, அகத்தை அசைவித்தது. ஏதோ ஒன்றுடன்-இருளுக்கும் ஒளிக்கும் அப்பாற்பட்ட ஒன்றில் ஐக்கியமானது போன்ற நினைப்பு. அந்த இருட்டே ஒளியானது போன்ற எண்ணம். தனித்துப் போவதை நினைவூட்டும் தனிமை. அதுவே அங்கும் இங்கும், எங்குமாய், ஏகமாய், அநேகமாய், பிரகாசிக்கிறது. தலையில் உட்பக்கம் ஒரு குகையாகிறது. உச்சியில் ஒரு ஒளி, அந்த ஒளி வெள்ளத்தில் பிரபஞ்சம் நட்சத்திரக் குவியல்கள், அண்ட அடுக்குகள். பேரடுக்குள். நான் நிரந்தரம் என்ற ஒரு பூரிப்பு. இருள் ஒளியாகவும், ஒளியை இருளாகவும் பார்த்துப் பழக வேண்டும் என்ற ஒரு தத்துவச் சிந்தனை..... தனிமையிலேயே, ஒரு தனித்துவம். நிரந்தரத்தைப் பற்றிய நினைப்பு. கூடவே ஒரு பயம். நான் ஏன் தூங்கக்கூடாது? இப்படி இருப்பதே ஒரு நிரந்தரம் என்றால். இது ஒரு நரகமாகாதோ? எனக்கு லேசாய் பயம் பிடித்தது. வாழ்ந்தது தற்காலிகம். வாழப் போவது நிரந்தரம் என்ற எண்ணம். வாழ்வுமில்லை. வாழப் போவதுமில்லை என்ற சிந்தனைச் சிக்கல். அது, உள்ளத்தைப் பின்னப் பின்ன, அந்தப் ら 2 。