பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 ஒன்றிப்பு எடுத்து, அந்தக் காகங்கள் வட்டமடிக்கும் திசையை நோக்கி ஓங்கினேன். ஓங்கி ஓங்கி அங்குமிங்குமாய் ஆடவிட்டேன். மேல்நோக்கியும், சாய்வாகவும், பக்க வாட்டிலும் சிலம்பு போல் சுற்றினேன். கோரதாண்டவமாய் அங்குமிங்குமாய் சுழன்றேன். ஒரு காகம், கம்பி முனையின் ஒரு சென்டி மீட்டர் இடைவெளியில் தப்பித்துக் கொண்டது. இப்போது அந்தக் காகங்களுக்கு பயம் பிடித்து விட்டது. அங்குமிங்குமாய் ஆகாயத்தில் சிதறிப்பறந்தன. குய்யோ முறையோ என்று கூச்சலிட்டன. கூட்டிற்கு மேலாய் பறப்பதும், அதை துறப்பதுமாய் வானில் சஞ்சரித்தன. அப்படியும், என் கோபம் தீரவில்லை. ஈட்டி பிடித்த வீரன்போல், அந்தக் கம்பியை தூக்கிப் பிடித்தபடி, அந்தத் தென்னை உராயும் விளிம்புச் சுவரைநோக்கி ஒடினேன். உள் மூச்சை வெளி மூச்சாக்காமலேயே, அந்தக் கம்பியை மேலே தூக்கி, அந்தக் கூடு இருக்கும் தென்னையின் உச்சியில் மாறி மாறி குத்தினேன். கள்ளாளி காகங்கள்தான். தென்னையில் அடிமுதல் நுனிவரை ஒன்றாய் குனிந்து, சில்லாடைகளால் சுற்றப்பட்ட இரண்டு ஒலைகளின் உட்குவியலில் கூட்டை வைத்திருக்க வேண்டும். கூடு தெரியவில்லை. அந்த உச்சியில் எங்கேயும் இல்லாததால் அது அங்கேதான் இருக்கும் என்ற அனுமானத்தில் கம்பியை நீட்டி, எக்கி எக்கி தென்னை உச்சியின் பக்கவாட்டுப் பகுதியில் இடித்தேன். குடைந்தேன்.... குத்தினேன். தென்னை ஒலைகளின் முதுகெலும்பான மட்டைகள் ஒடிந்து கம்பிக்கு வழிவிட்டன. சில்லாடைகள் சிதைந்தன. நீண்ட நெடிய மஞ்சள் துண்டாய் குறும்பல்களை சுமந்த அந்த தென்னையின் கற்பப் பைகளில் பல, துண்டுபட்டு துவண்டு விழுந்தன. வயது வராத தேங்காய்களுக்கு காவலாளிபோல் கொக்காய் வளைந்த சில்லாட்டைகள் சிதறிவிழுந்தன. ஆகமொத்தத்தில், நான் இடித்த இடியில், தென்னை மரமே குலுங்கியது. ஒலைகள் ஒன்றோடு ஒன்று