பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 171 அதே பெண்டாட்டியிடம் அங்கலாய்ப்பது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக என் காதுகளில் ஏறுகிறது. அவள் சொன்னது மாதிரி கூட்டம் வேறு கூடியிருக்கிறது. அனைவரும் தெரிந்தவர்கள். அவர்களுக்கு என்னுள் உள்ள ஒரு கசடனை அடையாளப் படுத்திவிட்டேனோ, அப்படி என்ன நான் கசடன்? கசடனேதான். திடீரென்று ஞானோ தயமோ... எதோ ஒன்று சிந்தனையில் உதயமாகிறது. மனம் சிறு வயதுக்கு திரும்புகிறது. அப்போது எனக்கு எட்டுவயது இருக்கலாம். கிராமங்களில் சிறுவர்களோடு சிறுவனாய் திரிகிறேன். சிறுவர்களில் ஒரு பிரிவினர் பொன்வண்டுகளை தீப்பெட்டிக்குள் அடைத்து அவற்றிற்கு கொடுக்காப்புள்ளி இலைகளை வெட்டிப்போட்டு வளர்க்கப் பார்ப்பார்கள். காடுகளில் கிடைக்கும் பூனிக்குருவிகளையோ வால் குருவிகளையோ குஞ்சுநிலையில் பிடித்து, மூங்கில் கூடைகட்டி, அவற்றை ஆசையோடு வளர்ப்பார்கள். இன்னொரு பிரிவினர், ஒணாண்களை சுருக்குக் கயிறுகளால் பிடித்து, தரையோடு தரையாய் இழுத்து அலைக்கழிப்பார்கள். காடு கழனிகளில், எ லி வேட்டைக்குப் போவார்கள். மரங்களை உலுக்கி, கீழே விழும் அணில்களை, நாயிடம் விடுவார்கள். இந்த வகையில், நான் இரண்டாவது வகைச் சிறுவன். ஒரு தடவை, ஊர்க் கிணற்றை ஒட்டியிருந்த தென்னையில் ஏறி, காக்காய் முட்டைகளை எடுக்கப் போகிறேன். முட்டைகள் முற்றி குஞ்சுகளாகி, நான் உலுக்கிய உலுக்கலில் முப்பதடிக்குக் கீழே விழுந்து சிதைகின்றன. நான் அச்சச்சோ போட்டபடியே கீழே இறங்கப் போகிறேன். உடனே, இரண்டு காகங்கள் குற்றுயிரும், குலை உயிருமாய் கிடக்கும் குஞ்சுகளுக்கு இடையே தவித்தபோது, ஊர்க்காகங்கள் அத்தனையும் ஒன்று திரண்டு, என்னை கொத்துகின்றன. தலையில் அடிக்கின்றன. மாறி மாறி தாக்குகின்றன. எனக்கும் கோபம்