பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


172 ஒன்றிப்பு வருகிறது. ஒரு கையை மரத்தில் சுற்றியபடியே, இன்னொரு கையால் கிட்டே வரும் காகங்களை அடிக்கப் போகிறேன். கைகளை மாற்றி மாற்றி அவைகளை நோக்கி வீசுகிறேன். விரல்களே ஆயுதங்களாய் கூர்மைப்படுகின்றன. ஒரு காலைச்சுற்றி வைத்துக் கொண்டு மறுகாலை தூக்கி அங்குமிங்குமாய் ஆட்டுகிறேன். இந்த வீச்சில் கீழே கூட விழுந்திருப்பேன். அதுவரை, இவனுக்கு வேணும் என்று சத்தமிட்ட தாய்க்குலம், தோண்டிக் கயிறுகளை வீசிiசி, அந்தக் காகங்களை துரத்தி, என்னை காப்பாற்றுகிறார்கள். நான், இப்போது என்னையே பரிசீலனை செய்கிறேன். என்னுள்ளே, எனக்குத் தெரியாமலேயே ஒரு குண்டனோ, முரடனோ, மூர்க்கனோ, பிறநலம் பேணாத க ச ட னோ , இரு க் கிறான். அவ ைன எ ன் னாலும் அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் இந்த காகங்கள் எப்படியோ அடையாளம் கண்டிருக்கலாம். உயர் கல்வியாலும், பரந்து விரிந்த அனுபவத்தாலும், பண்பட்டது போன்ற பழக்க வழக்கத்தாலும், வயது முதிர்ச்சியாலும், திரை போடப்பட்ட என்னுள் ஒளிந்திருக்கும் அந்தப் பொல்லாத கசடன், சிறிது நேரத்திற்கு முன்பு வெளிப் பட்டது போல், எப்போது வேண்டுமானாலும், வெளிப் படலாமோ. அப்படி வெளிப்பட்டு நல்லானாய் நடிக்கும் என்னை சுற்றுமுற்றும் பொல்லானாய் காட்டலாமோ. இவனை எப்படி வெளியேற்றுவது? நானும், மனமும் ஒன்றாகி, அந்த ஒன்று, ஒரணு உயிராய், பல்மிருகமாய், மக்கள் வெள்ளமாய், பூவாய், பூச்சாய், புழுவாய், மரமாய், கொடியாய், மலையாய், அனந்தங்கோடி பேரண்டங்களாய் பரந்து விரிந்த பிரபஞ்ச சங்கமத்திடம் ஒன்றுவது, ஒரு தீர்வாக இருக்கலாமோ? ஒம்சக்தி-தீபாவளி மலர், 1999