பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகாயமும் பூமியுமாய். என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு முன்னைய தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது ஒரு ஆ ன் மீகத் தே டல் முயற் சி. அதேசமயம், இந்தத் தொகுப்பு ஒரு முற்போக்கான முயற்சியா என்று என்னை வழிப்படுத்த வே ண் டி யது, முப்பதாண்டு காலமாக, இலக்கியத்தில் என்னை நிலை நிறுத்தி வரும் வாசகத் தோழர்களின் பொறுப்பாகும். என்னுடைய அறுபதுகளின் கல்லூரிக் காலத்தில், கவிஞர் கண்ணதாசனின் பத்திரிகையில் இப்படி எழுதிய கவிதையின் உரை விளக்கமே இந்தத் தொகுப்பு. பிறப்பாம் அன்னையவள் பிள்ளையினை முத்தமிட இறப்பாம் தந்தையவன் என்பிள்ளை என்றுரைக்க கடவுள் இது கண்டு கால உருக்கொண்டு இடத்தே கிடந்தபிள்ளை இருவருக்கும் சொந்தமென்றான். இறப்பும் அத்தீர்ப்பால் இப்படி வந்துவிடும் மீதமின்றி எடுப்பதில்லை மீதி என்ற பேச்சில்லை சமமாய் வருவதில்லை சமத்துவத்தை மறப்பதில்லை தன்னை நினைப்போர்க்கு தன்னை நினைப்பூட்டும். - சு. சமுத்திரம்