பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 9 ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு என்னால் தூங்காமல் இருக்க முடியவில்லை. இதனால் தியானத்தைக் கைவிட்டேன். இப்போது தியானிக்கலாமா? வேண்டாம். மீண்டும் தூக்கம் வரும். இந்த விழிப்புணர்வே ஒரு தியானம் தான். நான் அணுவினுள் அணு. அண்டத்தின் பேரண்டம். நானே பக்தன். நானே கடவுள். நான் பால்கனி தரையில் உட்கார்ந்தேன். எல்லாமே நான் என்றால், எதற்காக தூங்காமல் இருக்கவேண்டும்? இருக்கத்தான் வேண்டும். அதுவே ஞானம். அதுவே மோட்சம். நான் அண்டசராசரங்களை என் தலைக்குள்ளே சுற்றவிட்டேன். நெற்றிப் பொட்டை விசும்பாக்கி, அடி வயிற்றை நிலமாக்கி, கண்ணை அக்னியாக்கி, மூச்சை வாயுவக் கி , ஆ ன ந் த க் கணணிரை நீராக்கி , பஞ்சேந்தியங்கனின் ஒட்டு மொத்த உருவாக என்னைப் பாவித்துக் கொண்டேன். திடீரென்று உடுக்கையுடன் சிவன் தோன்றினான். நான் எழுந்து ஒரு காலைத் தூக்கி அங்குமிங்குமாய் ஆட்டினேன். ஊழிக்கூத்தனுக்கேற்ற ஞானக்கூத்து. பிறகு அப்படியே உட்கார்கிறேன். தூங்க வேண்டும் என்ற துவைத நிலையற்று அத்வைதமாக இருக்கிறேன். மனைவி என்னை உசுப்புவதை உணர்கிறேன். அவள் படபடப்பாய் பேசுவதைக் கேட்கிறேன். "என்னே இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க.. கண்னெல்லாம் சிவப்பா இருக்கே? ராத்திரி தூங்கலியா? என்னங்க, உங்களைத் தான். ஏன் இப்படி பித்துப்பிடிச்சி இருக்கீங்க?" அவள் சப்தம் கேட்டு, மகனும், மகளும் வருகிறார்கள். நான் உபன்யாசம் செய்வது போல் அமைதியாக பதிலளிக்கிறேன். "பயப்படாதேம்மா. துக்கம் விழிப்பின் சத்துரு. ஞானத்தின் எதிரி. துரங்காமல் தூங்கும் சுகத்தைக் கற்றுக் கொண்டேன். எனக்குக் கிடைத்த ஞானோதயம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.