பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 11 அவள் அஞ்ஞானி. அப்படித்தான் அழுவாள். நான் பைத்தியம் என்றுதான் நினைப்பாள். ஆனால் நானோ-ஞானி. புத்தனாய் ஆனவன். ரமணரிஷியாய் போனவன். ரமணரைக் கூட பைத்தியம் என்று ஆரம்பக் காலத்தில் அவர் மீது சிறுவர்கள் கல்லெறிந்தார்களாமே? சேrாத்திரி சுவாமிகளைக் கூட பைத்தியம் என்று போ லீ ஸ் ஸ் டே ஷ னி ல் அ ைடத் தார் க ளா மே ? வ ள் ள ல ா ைர க் கூ ட வ ா ய் க் கு வ ந் த ப டி விமர்சித்தார்களாமே? வைகுண்டசாமியைக் கூட சிறையில் போட்டார்களாமே? அவர்களைப் போலத்தான் நானும், நான் பைத்தியமில்லை. ஞானி, ஞானவான். அது சரி. ஞானத்திற்கும் - தூக்கமின்மைக்கும் என்ன சம்பந்தம்? தட்சிணாமூர்த்தி கூட கண்ணை மூடிக்கொண்டு தானே இருக்கிறார்? அனந்த சயனன் கூட பாற்கடலில் அரிதுயில் கொள்கிறானே.... நான் ஏன் தூங்கக் கூடாது? துங்கக்கூடாது என்று ஏன் அப்படி ஒரு எண்ணம்? ஞானத்திற்கும், தூக்கமின்மைக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ? இல்லை. ஞானம் என்னைப் பற்றிக் கொண்டது. ஞானமா? பைத்தியமா?..., பைத்தியத்தின் முற்றலா? அல்லது ஞானத்தின் துவக்கமா? மனைவியின் அழுகைச் சத்தம், என்னை நிமிர்த்துகிறது. அந்த அறை வாசலுக்குள் மாயமாய் மறைந்து போன, டாக்டர், இப்போது ஊசி மருந்தோடு வருகிறார். நடந்ததைக் கேள்விப்பட்டோ என்னமோ, அந்த குடிசைச் சாமியாரும், விபூதிப்பையோடு வருகிறார். இருவரும் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பனிப்போரில் யாருக்கு வெற்றி என்று பார்ப்போம். குமுதம் - 1992