பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


திடப்பட்டவன் 'அக்கா நாளைக்கு ஜான் கல்யாணத்துக்குப் போறிங்களா?" என்று கேட்டார் ஜேசுதாஸ். எலிஸபெத், "நான் குளோரி பிரசவித்ததற்காக அவர்கள் வீட்டுக்குப் பிராத்தனை செய்யப் போக வேண்டும், நீயும் ஜோஸப்பும் கல்யாணத்துக்குப் போயிட்டு வாங்க,” என்றாள். "அத்தானும் திருச்சியிலயிருந்து கல்யாணத்துக்காக வாறாராம்.” எலிஸபெத் நிமிர்ந்து பார்த்தாள். உதடுகள் துடித்தன. தம்பிக்காரர் அந்த உதடுகள் இதயமாக இயங்குவதைப் புரிந்து கொண்டார். சிறிது இடைவெளிக்குப் பிறகு, எலிஸபெத், "ஆமாம். ஜான் அவங்களுக்கு பெரியம்மா பேரன். நானும் வாரேன். நீ அத்தான் பக்கத்திலேயே உட்கார்ந்து, நான், அவங்கள பார்க்கிற வரைக்கும் பிடிச்சி வச்சிருக்கணும்,” என்றாள். அன்றிரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. காலையில் எழுத்ததும், "ஜான்ஸ்பி மாமாவுக்கு இடியாப்பம் பிடிக்கும். பிரமாதமா செய்து வை," என்றாள். "ஏய் பேபி, விட்டை சுத்தமா வைம்மா, ரேடியோ மேல துசைப் பாரு. ஹேங்கர உள்ளகொண்டு மாட்டு. நாற்காலியில் கிடக்கிற பாவாடய எடு, அவங்களுக்கு எந்தப் பொருளும் இருக்க