பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 13 வேண்டிய இடத்துல இருக்கணும். சிதறிப் போறது பிடிக்காது. ஜோஸப்! நீ என் ராஜா இல் லியா... எல்லாத்துட்டயும் தமாஷ் பண்றது மாதிரி அவருக்கிட்ட பேசாத நீ ஒண்னு கிடக்க ஒண்னு சொல்ல, அவங்க குத்திக்காட்டுறதா நினைக்கப் போறாங்க இன்னுமா டிரஸ் பண்ற தம்பி? வா நேரம் ஆவுது." அக்காளும், தம்பியும் நேரத்திற்கு முன்னதாகவே சர்ச்சுக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். அங்கிருந்த ஒரு சிலரில் அவங்களைத் தேடினாள். காணவில்லை. "இனிமேல் தான் வருவார். அவங்க முந்தியும் வர மாட்டாங்க. பிந்தியும் வரமாட்டாங்களே." மணமக்கள் அணி திரண்ட ஊர்வலத்துடன் வந்தார்கள். எல்லோரும் மணமாகப் போகும் ஜோடியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எலிஸபெத் தன் மாஜி ஜோடியைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தாள். எலிஸபெத், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். ஐம்பது வயதுவரை சென்னையில் அவள் தந்தை பாதிரியாராக இருந்தவர். அவள் இளம் வயதிலேயே அன்னையை இழந்துவிட்டாள். எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு செகண்ட்ரிகிரேட் ஆசிரியர் பயிற்சிக்கும் படித்துவிட்டு, சென்னையிலுள்ள ஒரு பள்ளிக் கூடத்திலேயே வேலை பார்த்தாள். திருச்சியில் தாலுகா அலுலகத்தில் குமாஸ்தாவாக இருந்த அருளய்யாவிற்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற்றது. இரு வ ரு ம் அ ன் னி யோ ன் னி ய மாகத் தா ன் வாழ்ந்தார்கள். அருளய்யாவும், அவள் தம்பிகளுக்குத் தன்னால் முடிந்த உதவிகளையெல்லாம் அவள் தூண்டுதல் இல்லாமலேயே செய்தார். ஆசிரியையான அவள், அவரிடம் மாணவியாக நடந்து கொண்டாள். குரு சிஷ்யை உறவு. அது ஒரு நாள் கூட, ஆண்டான் - அடிமை உறவாக மாறியது இல்லை.