பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 15 போய் அரட்டையடிப்பதும், அடிக்கடி சினிமாவுக்குப் போவதும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் பிறரைப் பேசுவதும், கணவனையே அதட்டுவதும் இவளுக்குப் பிடிக்கவில்லை. தேவாலாயப் பள்ளியில் வாங்குகிற சம்பளத்தைக் கணவரிடம் அப்படியே நோட்டு கசங்காமல் கொடுத்துப் பழகியவள் எலிஸபெத். தம்பி பிள்ளைகளுக்கு, பிறந்த நாட்கள் வரும்போதும், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரும்போதும், சுமாரான விலையில் பரிசுகள் வாங்குவதற்காக மட்டுமே கட்டியவரிடம் பணம் கேட்பாள். இப்போது, கட்டியவரிடம் பணம் கேட்டால், அவர், இரண்டாவதாகக் கட்டியவளிடம் கேட்டுக் கொள்ளும்படி கைகாட்டி விட்டார். என்றாலும், எலிஸபெத் அவளிடம் கேட்டாள். அவளோ இனிமே இந்த பழக்கமெல்லாம் கூடாது' என்று கைவிரித்தாள். எலிஸபெத் அருளய்யாவிடம், ஜாடை மாடையாகவும் பண்டாகவும் சொன்னாள். "அவள் சொன்னதில் என்ன தப்பு?" என்று திருப்பிக் கேட்டார் அவர். எலிஸபெத், மாதச் சம்பளத்தில், ஐம்பது ரூபாயை எடுத்து வைத்துக் கொண்டு, மீதியைக் கொடுத்தாள். இதை இளையவள், மூத்தவளின் அன்பில்லாமைக்கும், அவ நம்பிக்கைக்கும் அடையாளம் என்று வாதிட்டாள். அவர், 'ஒனக்கு என் மேல நம்பிக்கையில்ல. நான் பெத்த பிள்ளைய ஒன் பிள்ளையா நினைக்கல. இன்னும் தம்பி பிள்ளைங்களையே நினைச்சிக்கிட்டு இருக்கிற, ஒண்ணு, சம்பளம் முழுதையும் கொடுத்து இரு இல்லன்னா தனியா இரு அல்லன்னா தம்பிங்கக் கூடப் போயி சேரு," என்றார். எலிஸபெத் துவண்டு போனாள். இருபது ஆண்டுகளுக்கு மேலான பந்தம், கேவலம் ஐம்பது ரூபாயில் பரீட்சிக்கப்படுவது கண்டு பரிதவித்தாள். அதே சமயம், பணமில்லாமலேயே தன்னால் பந்தத்துடன் வாழ முடியும்