பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 திடப்பட்டவள் கர்த்தரையே கேட்டு விடவேண்டும் என்ற தார்மீக கோபம் அவளுக்கு. தாங்க முடியவில்லை. தாளவும் முடியவில்லை. முன் அறைக்கு வந்து முழங்காலிட்டாள். ஜெப புத்தகத்தில் நினைவுக்கு வந்த வாக்கியங்களைத் தன் சொந்த வாசகங்களோடு சேர்த்துக் கொண்டு தனக்குள்ளேயே கர்த்தரை முன்னிலைப்படுத்திப் பேசினாள். "பரலோகத்தில் இருக்கும் எனது பிதாவே! நான், பல நாள், பல்லாண்டு எனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று வேண்டியும், உரக்க சத்தமாய் உமது ஜபத்தைச் சொல்லியும் தேவகிருபை கிட்டவில்லை. இ த னா ல் , எ ன் பி ரிய மா ன வ ைர , நா ன் பி ரி ய வேண்டியதாயிற்று. கர்த்தாவே! என் இதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலர்ந்திருக்கிறது. என் பெரு மூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாமிசத்தோடு ஒட்டிக் கொள்கின்றன. நான் நித்திரை இல்லாமல், வீட்டின் மேல் தனித்திருக்கும் குருவிக்கு ஒப்பானேன். நீர் என்னை உயரத் துக்கி, தாழத் தள்ளியது ஏன்? என் நாட்கள், புகையைப் போல் ஒளியக் காரணமேன்? இதுவரை வருந்தி ஜெபம் செய்த இந்த அடியாள், இப்போது உம்மை வருத்தித் துதிக்கிறேன். நான் உமக்குப் பயந்து உம் வழியில் நடந்து, உம் மகிமையை உணர்ந்து உபதேசம் செய்பவள் என்பது உண்மையானால், நீர் என்னைத் திடப்படுத்த வேண்டும். ஆமென்." எ லிஸபெத் பிராத்தனையை முடித்துவிட்டு, நாற்கட்டில் மேலே உட்கார்ந்தாள். குடும்பத்தினர் அனைவரும் அவளை ஆச்சரியமாகவும், அனுதாபமாகவும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அவள் தம்பி மகன்கல்லூரிக்காரனான அருண், கையில் ஒரு காகித புத்தகத்துடன் வந்தான். அத்தைக் காரி, மனத்தை மறைப்பதற்காக, அவனிடம் பேச்சுக் கொடுத்தாள். "கையில என்னது அருண்?" 'நாவல் அத்தே."