பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரசவாதம் ஊருக்குச் சற்றுத் தொலைவில், தனித்து இருப்பது போல் தோன்றும் முருகக்கோட்டத்தை ஒட்டி இருந்த அந்தக் குடிசை வீட்டின் கதவுகள் மூடப்பட்டருந்தாலும், உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருப்பது வெளியே வெளிச்சமாகத் தெரிந்தது. ஊரில் வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களால் ஜோஸ்யர்' என்றும், டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளால் வைத்தியர் என்றும், உள்ளுர்ச்சாமியாடிகளால் 'சாமியார் என்றும், பணக்காரப் பண்ணையார்களால் பரதேசிப் பயல் என்றும், படித்த இளைஞர்களால் லூஸ்' என்றும் நினைக்கப்படுபவரான சம்பூர்ணம் - மாடத்தில் இருந்த ஒரு ஊதாப் பொருளை எடுத்துத் திருப்தியுடன் பார்த்துவிட்டுப் பிறகு அதனருகே இருந்த இன்னோர் ஊதாப் பொருளையும் உற்று நோக்கி விட்டு அருகே இருந்த ஒலைச் சுவடியைப் புரட்டி, குறிப்பிட்ட ஒர் ஏட்டில் உள்ள வாசகத்தை இலேசான குரலில், கனமான ராகத்தில் பாடினார். பிறகு, அந்த இரண்டு ஊதாப் பொருள்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே நின்றார். அந்தப் பொருள்களில் ஒன்று செப்புக் களிம்பு. இருபத்தைந்து பைசா எடையுள்ள செம்புக் கட்டியில், இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றாலத்திலிருந்தபோது எலுமிச்சம் பழச் சாறைப் பிழிந்து வைத்திருந்தார். இப்போது அந்தக் கட்டி தனது கய நிறமான ஊதா நிறத்தில் லேசாகக் குழைந்தது போல்