பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 2} களிம்பாக நின்றது. இன்னொன்று மயில் துத்தம். முள்ளம் பன்றி மாதிரி மொர மொரவென்று அதுவும் ஊதா நிறத்தில், உற்றுப் பார்க்கும் அவரையே உற்றுப் பார்ப்பது போல் இளித்தது. சம்பூர்ணம், கீழே உட்கார்ந்து, விபூதிப் பைக்குள் வைத்திருந்த பாதரசத்தை எடுத்துத் தரையில் வைத்தார். அது தரையில் அங்குமிங்குமாக ஒடிக் கொண்டிருந்தது. உடனே அவர் மடியில் வைத்திருந்த ஒரு மூலிகை இலையைப் பிழிந்து, அதில் ஊற்றினார். பாதரசம் இப்போது, கோலிக் குண்டு மாதிரி உருண்டு திரண்டு, அப்படியே நின்றது. சம்பூர்ணம், தன்னை மீறிச் சிரித்துக் கொண்டே ஊதா நிறத்தை உள்ளடக்கிய செம்பையும், களிம்பையும் மயில் துத்தத்தையும் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டார். இவற்றின் ஊதா நிறத்தைப் போக்கி விட்டால் கிடைக்கும் பொருள் சாதாவாக இருக்காது. அவருக்கு ஆண்டுக் கணக்கில் பணிவிடை செய்த தனது குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டதில் ஒரு திருப்தி இருக்கும். சம்பூர்ணம், கீழே உட்கார்ந்து பைக்குள் வைத்திருந்த மூலிகையை எடுத்து வைத்துக்கொண்டு அந்த ஊதாப் பொருட்களை உட்கார்ந்தபடியே பார்த்தபோது, மயில்சாமி! எப்போ சாமி வந்தீங்க? என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான். "மயில்சாமி. நீ வந்தது நல்லதாப்போச்சு. இன்றைக்கு ஒண்னு செய்யப்போறேன். அதுக்கு ஒன்னைத் தவிர வேறே ஆளில்லை. அதாவது வாலை என்ற பாத்திரத்தில் ஒரு மூலிகையைப் போட்டு, வீரம், பூரம் உட்படப் பல சாமான்களைப் போட்டு மூடிக் கமலாக்கினியால் எரிக்கணும். அதாவது, நெருப்பு பூ விரியறது மாதிரி எரியணும். அப்புறம் அதில் வருகிற நீராவியை ஒரு பாட்டிலில் பிடித்து நீராக்கி, அந்த நீரை மயில் துத்தத்தில் வைத்து அரைக்கணும். மயில் துத்தம் காய்ந்த பிறகு, அதை. 今ウ、2