22
ரசவாதம்
அகல் விளக்கில் வைத்துப் புடம் போடணும். மயில் துத்தத்தோட ஊதா நிறம் போயிடும். இதைத்தான் துருக போகும் என்று பாட்டு சொல்லுது. அப்புறம் இந்த செம்புக் களிம்பை உருக்கினால் வெள்ளையாய் மாறிடும். அதில் இந்த மயில் துத்தத்தை கலந்து, தண்ணிரில் கலந்து விட்டால்!”
“விட்டால்?”
'அதை நீயே பாரு. ஆனால் ஒண்ணு. நான் பொருளாசையால, இதைப் பண்ணல. வன்னியர் மகள் 'பெயர் கொண்டிருக்கும் மூலிகைன்னு பாட்டு சொல்லுதே அது எதுன்னு இன்னும் யாருக்குமே தெரியாது. என்னோட குருநாதருக்கும் தெரியாது. நான்தான் 'பண்ணைப் பனையைப் பார்ந்திருந்தான் என்கிற வரியை வன்னியர் மகளோட இணைத்துப் பார்த்தேன். அதன் விளைவாகக் கிடைத்த மூலிகையைப் பாதரசத்துலே சோதிச்சுப் பார்த்தேன். பேஷ். இன்னும் நாலு நாளையில் இந்த இரண்டு மேலேயும் இருக்கிற ஊதா நிறம் போய் இன்னொரு நிறம் வரும். அந்த நிறம், என்னோட குருநாதருக்கு, என்னோட நிறத்தைக் காட்டும். மற்றபடி எனக்கு வேற நோக்கம் இல்லை. உனக்கும் இருக்கப்படாது. சொல்றது புரியுதாப்பா?"
"எனக்குப் புரிஞ்சா என்ன. புரியாட்டா என்ன சாமி. ஒங்க குருநாதர் சொல்றதை நீங்க செய்வியளோ மாட்டியளோ... நீங்க சொல்லுறதை நான் தட்ட மாட்டேன்."
"சரி, ஆரம்பிப்போமா?"
சம்பூர்ணம், அதே கிராமத்தைச் சேர்ந்தவர்தான். ஒரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு இருபத்தைதந்து வயதில் மணமேடை கிடைத்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் மணமேடையில் சரிபாதியாக இருந்தவள் பின மேடைக்குப் போன துக்கம் தாங்காது அவரது சொத்துக்களை சகோதரர்களிடம் விட்டு விட்டுக் கோவில் குளங்களைச் சுற்றத் தொடங்கினார்.