உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

25


எனக்கு இப்பவே ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும். என்று குதித்த மனைவியிடம் தான் திருடன் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டி ரகசியத்தைச் சொல்லி விட்டார் மயில்சாமி. அதே சமயம், மத்தவங்க கிட்டச் சொல்லப்படாது' என்றும் சொல்லி விட்டார்.

அந்தத் தங்கக் கட்டியையே பார்த்துக் கொண்டு மயில்சாமியின் மனைவி நின்றபோது, பண்ணையார் அருணாசலத்தின் ஒரு பாதியான - அவரை விட இரு உடம்பு கொண்ட காளியம்மாள், தங்கக் கட்டியையும், அதைக் கெட்டியாகப் பிடித்திருந்தவளையும் நோட்டம் போட்டாள். மயில்சாமியின் மனைவியிடம் வயலுக்குச் போய்ச் சீம உரத்தைத் துரவிவிட்டு வாரீயா என்று சொல்வதற்காக வந்த வள், வந்த சொல்லை வாய்க்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டு, "எங்க நகைகளை இவ்வளவு சீக்கிரத்துல எப்படிம்மா உருக்க முடிஞ்சுது. மீதிய எங்க வச்சிருக்க...? அவரு போலீஸ் கிட்டத்தான் போய்க்கிட்டு இருக்காரு," என்று சொன்னபோது, மயில்சாமியின் மனைவியால், ரகசியத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சம்பூர்ணம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். வார ஐப்பசில. கல்யாணத்தை வச்சிடு, நாளைத் தள்ளாதே' என்று மயில்சாமியிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, பண்ணையார் அருணாசலம், வீட்டுக் கதவை தள்ளிக் கொண்டு வந்தார்.

"நானும் ஐப்பசில என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். நிச்சயதாம்பூலம் கூட ஆயிடுச்சு. ஒரு பத்து பவுன் நகையாலே நின்னுடப்படாது பாருங்க... இது செம்புக் களிம்பு அரைகிலோ. இது மயில் துத்தநாகம் கால் கிலோ. நீங்க சும்மா அந்த மூலிகையைப் போடணும். அவ்வளவுதான். கல்யாணம் முடிஞ்சிடும்."

சம்பூர்ணம், மிரண்டும் தொனியில் பேசிய பண்ணையார் அருணாசலத்தை திடுக்கிட்டுப் பார்த்தார். அவர் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்த இரண்டு ஊதாப்