பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 37 கொடுத்து, அவள் பெண்மையைப் பேணுகிற அவனது நட்பு நீடிப்பதற்காக இந்தச் சில்லறைத் தொல்லைகளை, அவள் ஒருவிதக் கலக்கத்துடன் தாங்கிக் கொண்டாள். பிரகாஷிற்கு நம்பிக்கை வந்து விட்டது. எப்படியாவது அவளை மகாபலிபுரத்திற்குக் கூட்டுக்கொண்டுபோய் விடலாம். - தலைமைக் குமாஸ்தா, தனக்குள்ளேயே பொருமினார். அப்பாவிப் பெண்ணை, பெண்களை வஞ்சிக்கும் டெக்னிக்' தெரிந்த ஒரு அயோக்கியன் கெடுக்கப் போகிறானே என்று வருந்தினார். இதற்கு முன்பு பல பெண்களை அவன் இப்படி நட்பாக்கி வஞ்சித்திருக்கிறான் என்று அவர் சொல்லத் துடித்தார். அதே நேரத்தில், இந்த ஸ்கேண்டல் பெரியதாகி, மானேஜர் காதுக்கு எட்டி, வசந்திக்குச் சீட்டுக் கிழிந்து, தன் மகளுக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்தாரோ, அல்லது 'உன்னப் பார்க்கலங்ற ஆத்திரத்துல பேசுறியா?ன்னு அவன் திருப்பிக் கேட்டாலும் கேட்பான் என்று பயந்தாரோ தெரியவில்லை. அவர் பேசாமல் இருந்துவிட்டார். மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன், ஒரு சமயம் சாடை மாடையாக, ‘சிலந்தி வலை பின்னிட்டு, பூச்சியும் விழுந்த மாதிரிதான் என்று சொன்னாள். வசந்திக்குப் புரியவில்லை; புரிந்துகொண்ட பிரகாஷ், மிஸஸ் பரிமளம்! நம்ம வெங்கட் ராமன் இப்போ எங்கே இருக்கார்?" என்று கேட்டு வைத்தான். பரிமளம் பெட்டிப் பாம்பாகிவிட்டாள். வெங்கட்ராமன், அவள் பழைய காதலன். ஒருநாள், காலையில் வசந்தி கலவரத்தோடு வந்தாள். அவளுக்காக முன்னதாகவே வந்துவிட்டான் பிரகாஷ். "ஏன் வசந்தி. ஒரு மாதிரி இருக்கே?" 'ஏழப் பொண்ணுன்னா என்ன வேணுமானாலும் பேசலாம்னு நினைக்கிறாங்க. பொறுக்கிப்பசங்க." "நீ யாரைத் திட்டறே?" 今y.女。