பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 தோன்றாத் துணை மறுநாள், அவளை அலுவலகத்தில் பார்த்தபோது, எடுத்த எடுப்பிலேயே, "நேற்று ஏன் வர்ல?" என்றான். வசந்தி, அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். "கந்தசாமி கோவிலுக்குப் போனேன்." "வசந்தி! எப்படியாவது இன்றைக்கு மகாபலிபுரம் போயாகணும்." 'எப்பவும் போக வேண்டாம். பேசாமல் உங்கள் மனைவி பிள்ளைகளோட போய்ட்டு வாங்க" "அது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா?” வசந்தி, அவனுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், அவனை ஒரு அயோக்கியனைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பிறகு நிதானமாக நடந்து தனது இருக்கையில் அமர்ந்தாள். குமுதம், 12-5-1977