பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகாயமும் துமிக/மாய். அழகும், ஆபத்தும் அருகருகே இருக்கும் என்பதை அறிவுறுத்துவது போல், அந்தச் சாலையின் ஒரு பக்கம் புதர்களும், பொந்துகளுமாய் மண்டிக் கிடக்க, இன்னொரு பக்கம் மாடிக் கட்டிடங்கள் கூடிப் பேசுவது போல் நெருக்கமாய் நின்றன. அழகுதான் ஆபத்து என்பது போல் எத்தனையோ உயிர்களை விபத்துக்களால் விழுங்கிய அந்தச்சாலை, விசாலத்தோடும், கண்ணைப் பறிக்கும் கறுப்பு நிற வண்ணத்தோடும், மத்தியில் கூம்பு வடிவத்திலான மஞ்சள் வெள்ளை கோடுகள் போட்ட சிமெண்ட் பாளங்களோடும் நிலவொளியில் மின்னியது. இரவு கன்னிமை கழிந்து, பகலென்னும் சேயைப் பிரசவிக்கக் கூவுவதைக் காட்டுவது போல், புதர் பகுதியில் ஆந்தைகள் அலறின. எதிர்ப்புறத்தில் அமைந்த சிங்காரப் பகுதியில் இதையே எடுத்துக்காட்டுவது போல, இரவுக் காவலர் ஒருவர் பூண்போட்ட கைக்கம்பால் தரையைத் தட்டியபடி விசிலால் ஊதிக் கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த விளக்கு அலறுகிற ஆந்தையின் கண்ணைப் போல மின்னியது. ஒரு பகுதியில் நிலவொளியைப் புதர்கள் விழுங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு பகுதியில் கார்ப்பரேஷன் வெளிச்சத்தை 'கரப்ஷன் விழுங்கிக் .ெ கா ண் டி ரு ந் த து ஒ ன் றி ல் க ள் ள ச் சாரா ய ம் காய்ச்சியதற்கான தடயங்கள். இன்னொன்றில் தெரு