பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


44 ஆகாயமும் பூமியுமாய். எதிர்முனைக்கு நகர்ந்து அந்த உருவத்திற்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டே பேசியது. "இது இன்னாடா பேஜாரு. இந்த எல்லம்மாதான் படாத பாடு படறதா நெனச்சேன். என் கதைதான் ஒன் கதையா. ஐயரம்மாவுக்குக் கூட இந்த நெலமயா? நான் என்னோட ஜாதி லதான் வயசான வங்கள... முண்ட மூதேவின்னு திட்டித் துரத்துவாங்கோன்னு நெனச்சேன். கட்சில..... ஒன் இதுலகூட. அட மாரி. அடுத்த ஜென்மத்துல பிறந்தா ஒன் குடில பொறக்கணும். அப்போ தான் வயசான காலத்துல நல்லா கீலா முன்னு நெனச்சேனே." 'லோகத்துல எப்படியோ... நம்மோட தேசத்துல. வயசாணவாள், தம்பிடிக்குப் பிரயோசனம் இல்லேன்ன தெரிஞ்சுண்டா அவாள தள்ளி வைக்கிறதுல ஜாதி வித்தியாசம் கிடையாது. நீ, பிராமண குடில ஜென்மம் எடுக்கணும்னு நினைச்சது மாதிரி, நேக்கும் ஒரு ஆசை.. அடுத்த ஜென்மத்துல சேரில பிறக்கணுமுன்னு நெனச்சேன். உதைச்சாலும், சேரில அவமானப்படுத்தணும்னு நோக்கம் இருக்காது. உதைப்பான். ஆனா ராத்திரியில 'அம்மா சாப்புடுமான்னு கெஞ்சுவான். ஆனா என்னோட இதுலே ஒரு தடவ அசடுன்னு பட்டம் வாங்கிட்டா. அப்புறம் அந்தப் பேர் வாங்கினவாளுக்கு எவ்வளவு ஆயுள் கெட்டியோ. அந்த அளவு அந்தப் பட்டமும் கெட்டியாய் நிக்கும்." "நீ வேற. மகாமாயிகிட்டே சேத்துக்கோன்னு கேளு. இல்லன்னா. இனிமேல் கஷ்டப்படாம பொறக்கணும்னு கேளு. ஆனால் சேரில. பொறக்கணும்னு மட்டும் கேட்காத கேட்கப்படாது." "இப்பக் கூடத் தெளிவா சொல்றேன். ஒன் உடம்பில் நானும், என் உடம்புல நீயும் பாயணுமுன்னு பகவான் இப்போது சொன்ன கூட சரி, நேக்கு சந்தோஷமாய் இருக்கும்".