பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 45 "ஆமாம். தெரியாமத்தான் கேக்கேன்? எத்தனை பிராமணத்திங்க என்னை மாதிரி வேண்டாம். ஒன்ன மாதிரி இப்டி தெருவுல நிக்கறாங்க? இந்த எல்லாம்மாவுக்குப் பதில் சொல்லு பாக்கலாம்." "இங்கே தான். தப்பு செய்யுறே. எல்லம்மா. பிராமண ஜாதி பொண்ணுங்க தெருவுக்கு வராம இருப்பது ஒரு துக்கமான விஷயம். ஒங்கள்ல வயசான கிழம் கூட எல்லாத்தையும் உதறிப் போட்டுட்டு, எப்படியோ பிழைப்பு பண்ண முடியும். ஆனால் எங்க இதுல என்னை மாதிரி வயசான பெரியவாளும், வயசுலேயே ஆம்படையானப் பறிகொடுத்துடுற விதவைங்களும் வாழாவெட்டி பொண்ணுங்களும், வீட்டுக்குள்ள கிட்டத்தட்ட சிறை வாசம் தான் செய்யனும். லோகத்துல அவாளுக்கு ஒரு வேலையும் தெரியாது. அதனாலே வெளியேற பயம். அதனால் எத்தனையோ ஆத்துல. இவாளுக்கெல்லாம் சாட்சாத் சிறைவாசந்தான். இவங்களோட நிலைமைக்கும், ஜெயில் வாசத்துக்கும் வித்தியாசம் இருக்குறதா நேக்கு தோணல. ஜெயிலுலயாவது நூறு பேரோட பழகலாம். விதவிதமான குற்றவாளிகளை மாறி மாறிப் பார்க்கலாம். ஆனா இவங்களோட சிறைவாசம் ஒரு சின்ன ரூம் அவாள் பாக்கறதும் ஆயுள் முழுவதும் ஒரே விதமான குற்றவாளிங்கதான். நான் ஒனக்கும் சேர்த்தியா பேசறேன். அடுத்த ஜென்மம் வேண்டாமுன்னு பகவான்கிட்டே கேளு. அப்படியே ஜென்மம் வந்தாலும் என்னோட வம்சத்துல வேண்டாமுன்னு கேளு” "நீ சொல்றதும் எனக்கு ஒருவகையில. சரிதான் போலத் தெரியுது. ஒங்க இதுல சிறைவாசமுன்னா-எங்க இதுல இந்த மாதிரி பொம்மனாட்டிங்க நெலமை... வேற மாதிரின்னாலும், விஷயம் ஒண்ணுதான். அதாவது கல். மண்ணை உடைக்கிற கடுங்காவல் தண்டனை. அப்புறம் அந்தத் தண்டனையில் இருந்து தப்பிக்கறதுக்காக... கண்கணாத இடத்துக்கும் போற நிலைமை. ஜெயிலுல