பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ஆகாயமும் பூமியுமாய். வாணா முன்னு..... வேற இடத்தில தனியா குடிசை போட்டேன். பத்து வருஷமா பணஞ்சேத்தேன். பிள்ளயாண்டானும் பொண்ணும் அவ்வப்போ வந்து. பணம் வாங்கிக்கினு போவாங்க. நல்லது கெட்டதுக்கு நானும் போவேன். பேத்திங்க.. காலுல, கொலுசு போட்டேன். பேரங்க. கையில மோதிரம் போட்டேன். ஆனால்.” "ஆனா. ஒரு மாசமா உடம்புக்கு முடியல. அப்போ பாத்துக் கையில இருந்த முந்நூறு ரூபாய வண்டில போய் இஸ்திரி போடுற பாபு. "கடனா தா, அடுத்த வாரம் தரேன்னான். குடுத்தேன். ஒடிட்டான். உடம்பு சொல்றத கேட்கல்லே. கையில பணமில்ல. வேல பாக்குற வீட்டுக்காரங்க ஒடம்ப குணப்படுத்திட்டு வான்னு கூட சொல்லலே. ஏதோ எனக்கு சலுகை பண்றது மாதிரி "வேற ஆள நீயே சொல்லு. நாங்க அமர்த்திக்கிறோ'முன்னு சொன்னாங்க... எனக்கும் முடியல... பிள்ளவூட்டுக்குப் போனேன். கையில பணமில்லன்னு தெரிஞ்சுகிட்டான். அதென்னமோ நம்மோட கையில... பணம் இருக்கறதையும் இல்லாததையும்.... நம்ம சொல்லாமலே ஜனங்க தெரிஞ்சுக்கிறாங்க. சரி எதுல விட்டேன்?" "மகன் வீட்டுக்குப் போனேன்னே.” 翁 "போனேனா. அவனும் அவனு சம்சாரமுமாய் "ஒனக்கு யாரு ஒஸ்தியோ அங்க போன்னு கத்தினாங்க.." சொம்மா சொல்லப்படாது. பிள்ள அடிக்கவர்ல. அடிக்க வந்த சம்சாரத்த தடுக்கல. அவ்வளவுதான். சரின்னு 'ஒஸ்தி' வீட்டுக்கு வந்தேன். அதான் பொண்ணோட வீட்டுக்கு. 'ஆத்தா ஆத்தான்னு மகள் காலைப் பிடிச்சா. மருமகன் கையைப் பிடிச்சான். இப்படி பிடிச்சப்போ ரெண்டு பேருமா.. என்னோட இடுப்புல. காசுப்பை இல்லாததைப் பாத்துட்டாங்க போல. ரெண்டு நாளு பேசல. மூணாவது நாளு மூஞ்சு காட்டுனாங்க. அப்போ பாத்து உடம்புக்கு ரொம்ப முடியல. வெளில படுத்தேன். ஒஸ்தி பொண்ணு