பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 49 வந்து ஒண்க்கு தலையணை வேற கேக்காமே"ன்னு சொல்லிக்கினு அதை எடுத்தாள். நான் எழுந்தப்போ. மருமகன் பாயைச் சுருட்டினான். சுருட்டுனவன் கைய பாத்தேன். அதுல நான் போட்ட மோதிரம்! மகளோட மொகத்தப் பாத்தேன். என்னமாதிரியே மொகம்! இன்னா பண்றது? அப்டியே பொறப்பட்டேன். அவங்க வான்னும் கூப்புடல. போன்னும் பேசல. நானு பாட்டுக்கு நடந்தேன். இப்போ இங்க நிக்கறேன். இனுமே எங்க நிக்கப் போறேனோ. சரி. என் ராமாயணம் போதும். ஒன்னோட பாரதத்தைச் சொல்றியா?" “ஒன்னோட கதை... ராமாயணம்தான். உத்ர காண்டத்துல. சீதே நின்னதுக்கும் நீ இப்போ நிக்கறதுக்கம் வித்யாசமில்ல. காரணம் வேறுதா இருந்தாலும், அவாள் செய்த காரியம் ஒண்ணுதான். ஒன் கஷ்டத்துல. என் கஷ்டம் பெரிசாத்தோணல. விட்டுத் தள்ளு." "அப்டி சொல்லப்படாது. நம்மளால.... சந்தோஷத்தான். பங்கு பூட முடியாட்டியும்.... கஷ்டத்தையாவது பங்கு பூடலாம். அம்மா!" "என் பெயர் விசாலம். சும்மா பெயர் சொல்லிக் கூப்பிடு." "அது அப்பால. இப்போ ஒன்னோட கதையைப் பிட்டுப்பிட்டு வை" . விசாலம் மாமி, பஸ் ஸ்டாண்ட் துணோடு துரும்பு போல ஒட்டிக்கொண்டாள். பாதிக் கண்ணை மூடிக்கொண்டாள். இடது காலைத் தூக்கி, பெஞ்சில் வைத்துக் கொண்டு அதன் மேல் மொவாயைச் சாய்த்துக் கொண்டே அரற்றினாள். “கழுத கூட, குட்டியாய் ஜனிக்கும் போது, அழகாய்த் தோணும். ஆனால் நான் அப்டில்ல. இப்போ எப்டி இருக்கேன்னோ... அப்டித்தான் அப்போவும்