பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


52 ஆகாயமும் பூமியுமாய். வாழாமல்கெட்டே நான் வாழ்ந்து கெட்டேன். நாம வாழ்ந்தது வாழ்வுல்ல. சும்மா பொளப்பு. போவட்டும், ஒன்னால என்ன மாதிரி இருக்க முடியாது. இது சேறு கண்ட இடத்ல மிதிச்சு, தண்ணி கண்ட இடத்ல கழுவுன கட்டை நீ அப்படியில்ல. வா. நானு ஒன்னை ஒன் தம்பி மவன் கிட்டக் கூட்டிக்கினு போய், அவரை நாக்கைப் பிடுங்கிக்கிறாப்போல ரெண்டு கேள்வி கேக்குறேன் கண்டிப்பா சேத்துக்குவான். உம் புறப்படு." "நானும் இதையே வேற விதமா நெனச்சேன். நான் சமையல்ல நளபாகம் தெரிஞ்சவள். எப்படியோ பிழைச்சுக்குவேன். அதோட, நான் புறப்பட்ட வீடு உறவுன்னாலும் அவாள் ஒரளவு அந்நியாள்தான். ஆனால் ஒன் நிலம அப்படி இல்ல. ஆயிரந்தான் நடந்தாலும், அவள் ஒன் மகள். ஒன்னோட ரத்தம். எழுந்திரு எல்லம்மா. ஒன்னக் கூட்டிடுண்டு போய், ஒன் மகன் கிட்டே விடுறேன். நன்னா நாலு கேள்வி கேக்கறேன். தட்டமாட்டாள். ஏனா பிராமண ஜனங்கள, சேரி ஜனங்க நன்னாப் புரிஞ்சுகிட்ட காலம் இது. புறப்படுவோமா?" - "வானாம்மா. உடைஞ்ச கல்லு ஒட்டாது. நான் கொஞ்சம் வைராக்கியக்காரி.” "நானும் அப்படித்தான். என் பையங்க ரெண்டு பேரும் பெரியாளாகி இப்போ திருச்சில வேல பாக்கறதாய்க் கேள்வி. நான் இங்க இருக்கறத அவாள் தெரிஞ்சுண்டு இருப்பாள். இருந்தாலும் அம்மாவாச்சேன்னு எட்டிப் பாக்கல. போனா, வளத்த கடமைக்கு இல்லாட்டாலும், பெற்ற கடமைக்கு உதவுவாள். ஆனாலும், நேக்கு இஷ்டமில்ல. அம்மான்னு ஒருத்தி இருக்கான்னு நினைக்காத பிள்ளைங்ககிட்ட என்ன வேண்டியிருக்கு" "ஒன் பிள்ளைங்கள ஒன்னால மறக்க முடியுதா?” "இந்த பாரு எல்லம்மா இந்த மாதிரி எல்லாம் என்னைச் சோதிக்காதே."