உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

53


"நான் இன்னா சொல்லிட்டேன். என் இப்படிப் பதறுறே. என் மகன் உதச்சான். மகள் துரத்தாமல் துரத்தினாள். அப்டியும் அவங்க மேலே இருக்கிற பாசம் எனிக்கிப் போக மாட்டேங்கு. பாழாப் போன மனக கேக்க மாட்டேங்குது. ஒனக்கும் அப்படியான்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்.”

"என் தம்பி மருமகள் அந்நியம். என்னோட சமையல் அனுபவமும், அவளோட வயசும் ஒண்னு கண்டபடி என்னை க் கரிச்கக் கொட்டறவ ளானாலும் கூட சின்னஞ்சிறுசு விட்டுட்டுப் புறப்பட்டுட்டோமேன்னு நேக்கு மனசு கேக்க மாட்டேங்குது. பெத்த பையன்கள எப்படி மறக்க முடியும்? ஆனால் ஒன்னோட மனசும் என்னோட மனசும் யாருக்குப் புரியும்? எதையும் ஆதாயம் இருந்தால்தான் புரிஞ்சுக்கறதுன்னு கங்கணம் கட்டிக்கிட்ட கலியுகமாச்சே இது."

இரு மூதாட்டிகளும் சிறிது நேரம் பேசவில்லை. இருவரும் தத்தம் பிள்ளைகளிடம் சஞ்சரித்தார்கள். புறப்பட்ட இடங்களைத் திரும்பிப் பார்த்தபடியே நெடிய மெளத்தில் சிக்கினார்கள். பிறகு அந்த மெளனப் புதை மண்ணில் இருந்து விடுவட்டவர்களாய், தலைகளைத் திருப்பி, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். விசாலம் ஆகாயத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டாள். திடீரென்று மெய் சிலிர்க்க எழுந்து நின்று, எல்லம்மாளின் கரங்களைப் பிடித்துக் கொண்டே தாங்க முடியாத வேகத்தில் பேசினாள்.

"இப்ப எனக்கு ஒரு எண்ணம் தோணுது. சிரிக்காமல் கேளு. பகவான் கிட்ட எனக்கு முத்தி கொடுப்பா. பிறவியை அறுப்பான்னு கேட்டுப் பிராத்தனை செய்தவள் நான். ஆனால் அதுக்கு இப்போத்தான் தகுதி வந்திருக்காப்பல தோணுது. இந்த rணத்துல பிள்ளைங்க தோணல. உறவு தோணல. இந்த லோகத்துல இருக்கிற அத்தனை மக்களும் நான் பெத்த பிள்ளைங்களாய் எனக்குத்

ஆ.5