பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 55 முறையில ஏதோ ஒரு கோளாறு இருக்காப்பலத் தோணுது. இத இடிச்சு நொறுக்கனும் போல, அதாவது நரிக்கிட்ட இருந்து பிள்ளைக்குப் போராடற ஒரு தாய் மாதிரி எனக்குக் கோபம் வருது." "நீ கம்யூனிஸ்ட் மாதிரிப் பேசறேடி" "அப்படின்னா என்னம்மா?” "அம்மான்னு சொல்லாதே. நான் டீ பொடுற மாதிரி நீயும் மேன்னு போடு. ஏதோ ஒண்னு கர்ம வினையோ, மனுஷ வினையோ... நாம ரெண்டு பேரும் செல்லாக் காசுங்க. நாம காரியம் செய்ய முடியாது. அதனால தமக்குக் காரணமும் தேவை இல்லை. நாம இந்த ஜனங்களோட தாயின்னு இப்ப ஒரு எண்ணம் வருது பாரு. அத மனசுல அப்படியே பிடிச்சுக்கலாம். மனசுக்குள்ளேயே சொல்லிக்கலாம்." இரு மூதாட்டிகளும் ஆகாயமும் பூமியுமாய். ஆனவர்கள் போல, மெளனத்தில் மூழ்கினார்கள். கல்கி - 1979