பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 பக்த கேடிகள் பெயர்ப் பலகை இல்லை. வேட்டி அல்லது சேலை மடிப்பில் முடிச்சுபோடும் இடுப்புபோல், அந்தப் பலகை பிய்த்தெறியப்பட்டிருந்த தடயங்கள் தெரிந்தன. இந்த அறைகளுக்கு வெளியே- இவை கொடுத்த 'டானா வளை விற்குள் கிளார்க்குகள். கிளார்க்கிகள். சரி வர்ணணை போதும். இங்கே நடக்கும் வம்புக்கு வருவோம். வடக்கு அறையில், பெருமாள் பெரும் போடு போட்டுக் கொண்டிருந்தார். நாற்பத்தைந்து வயதுக்காரார். பம்பைத்தலை. பளிச்சான சிவப்பர். இடுப்புக்குக் கீழே கறுப்பு வேட்டி. மோவாய்க்கு கீழே குறுந்தாடி. கழுத்துக்கு மேலே உத்திராட்ச மாலைகள். சந்தன நெற்றி. குங்கும புருவம்... ஐயப்பன் போட்டோவிற்கு முன்னால் ஊதுவத்தியைக் கொளுத்தினார். பிறகு ஒரு கற்பூரத்தை, சின்னஞ்சிறு குத்து விளக்குத் தீபத்தில் தொட்டார். சூடு பொறுக்க முடியாமல், அதைக் கீழே போட்டார். பின் தாம்பாளத்தட்டில் இன்னொரு கற்பூரத்தை வைத்து, வத்திப் பெட்டியின் உதவியுடன் நெருப்பிட்டார். கற்பூர ஜோதியை வட்ட வட்டமாக ஆட்டியபடியே. "ஜெய ஜெய சுதனே ஐயப்பா ஹரஹர சுதனே ஐயப்பா-என்னை நாடு கடத்தாதே ஐயப்பா-என் நம்பிக்கைக் கெடுக்காதே ஐயப்பா" என்று கத்தியபோது, இவரது கோஷ்டியைச் சேர்ந்தவர்களும், பழனிச்சாமிக்குக் கீழே வேலை பார்ப்பவர்களுமான ஊழியர்கள். அந்த அறைக்குள் ஒன்று திரண்டு வந்து, பெருமாளை, ஐயப்பனாக அனுமானித்தது போல், ஐயப்பன் போட்டோவைப் பார்க்காமல், அசல் பெருமானை நோக்கி 'சாமியே சரணம் ஐயப்பா கோரஸ் கொடுத்தார்கள். இதே இந்தச் சமயத்தில், தெற்கு அறையில் பழனிச்சாமி, முருகனின் பெயிண்டிங் போட்டோவிற்கு