பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 பக்த கேடிகள் 'ஐயப்பா சண்டையிட்டாலும் நாம் சகோதரர் அன்றோ? பேசாமல் அதோ அந்த ரிசப்ஷன் அறைக்குப் போய் சாவகாசமாய் பேசலாமே? ஐயப்பனிடம் நயம்பட பதிலளித்தான்.' 'நாம் சகோதரர்கள்தான். ஆனால் நம் வாகனங்கள் அப்படி அல்லவே. பூலோகத்தில் கார், லாரி டிரைவர்கள், அனைவரும் ஒரே பாட்டாளி வர்க்கம்தான். ஆனால் ரோட்டில் எதிரும் புதிருமாய் வரும்போது, நாயும் பூனையுமாய் மாறுவதை பார்த்திருக்கிறேன். இங்கேயோ. வாகன ஒட்டிகளான நாம் பொறுத்தாலும். நம் வாகனங்கள் பொறுக்காது. இங்கே ஒரு மகாயுத்தமே! நடக்கும் ஆகையால், ரிசப்ஷன் அறைக்குப் போகாமல் இங்கிருந்து பேசுவதே உசிதம் ‘புரியுது ஐயப்பா. கீழே ரிசப்ஷன் அறையில் உட்கார்ந்தால், அந்த வழியாக கோவிலுக்குப் போகப் போகும் என் பக்தன் பழனிச்சாமியால் ஆகர்ஷிக்கப் படுவோம் என்று பயப்படுகிறாய்' 'குழந்தையாய் இருக்கும் போதே புலிப்பால் கேட்டவனுக்கு.... புலியையை காட்டிய நானா பயப்படுவேன்? அதோடு உன் பக்தனிடம் ஆகர்ஷிக்கப்பட. என்ன இருக்கிறது? தோற்றத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது மாதிரியான இவன். போன வருடம். ஒரு பொய் பில்..... அதுதான் போகாத ஊருக்குள் போனதாய் எல்.டி.சி. போட்டவன். ஒவ்வொரு பைலுக்கும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி. அந்த லஞ்சத்தில் நூறு ரூபாய் ஒன்றை, உன் உண்டியில் லஞ்சமாய் போடுபவன். ஆபிஸ் காரையே. டாக்ஸியாய் கொள்ளை அடித்தவன்." 'நிறுத்து ஐயப்பா நிறுத்து. ஒன் பக்தன் மட்டும் என்னவாம்? இந்த வருடம். ஒரு அப்பாவிப் பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாகச் சொல்வி. ஐயாயிரம் ரூபாய் வாங்கியவன். அவளையும் கெடுத்து. கிணற்றில் விழச்