பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 பக்த கேடிகள் நாரதமுனி, தேவலோகத்தில் இருந்து அலறிப் புடைத்து, அந்த தெய்வக்குமாரன்களின் முன்னால் தோன்றினார். அவசரத்தில் வீணையையோ அல்லது தம்புராவையோ எடுக்க மறந்து வந்தார். உச்சி முடியில் பூக் கட்டவும் மறந்து போனார். யாரைக் கும்பிடுவது என்று யோசித்தார். சீனியாரிட்டி பிரச்சினை வரும் என்று பயந்து போனார். எப்படியோ இருவருக்கும் பொதுப்படையாக ஜாக்கிரதையாக ஒரு கும்பிடு போடலாமே என்று யோசித்தார். அப்புறம் கும்பிடு போடலாமே உபதேசியானார். 'பிரபுக்களே! நீங்கள் இருவரும் போரிட்டால் தேவலோகம் தாங்குமா? பூமி பிழைக்குமா? 'யார் பிழைத்தால் எனக்கென்ன? முருகா என்று மூன்று நேரமும் என்னைக் கூப்பிடும் பழனிச்சாமி டைரக்டர் ஆகாதவரை..? 'நாரதா! நீயே. சொல். என் பக்தன் பெருமாள், பிள்ளைக் குட்டிக்காரன். அவனுக்கு பிரமோஷன் வரப்போகுது... அதற்காக சென்ைைய விட்டு நகர முடியாது. 'நாரதா! நான் சொல்வதையும் நீ கேள்... என் பக்தனுக்கும் வரப்போகுது பதவி வுயர்வு. இவனும் சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்டவன்.ஆகையால் இவனே டைரக்டர்...! 'பிரபுக்களே! உங்கள் பக்தர்கள் சென்னையை விட்டு நகரக்கூடாது. அவ்வளவுதானே." "ஆமாம்.ஆமாமாம்.' 'அப்படியானால் ஒரு அடிஷனல் டைரக்டர் போஸ்டை உருவாக்கிவிடலாம். இதனால். இரண்டு பேருமே. சென்னையை விட்டு நகர வேண்டியதில்லை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், இப்போது காலி யாக இருக்கும் டைரக்டர் போஸ்ட் பழனிச்சாமிக்கும்.