பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ᏙᎥ இன்னும் சொல்லப் போனால் ரத்தம் குடிக்கும் கிராமத்துத் தேவதைகளை, அறவே வெறுத்தேன். என்றாலும், கல்லூரியில் படிக்கும்போது ஒரு கட்டத்திலேயே தேங்கிப்போன சில சித்தர்களோடு, எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால், நம்மை மீறிய அதீத சக்திகள் பல்வேறு கூறுகளாக இருக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த அதீத சக்திகள்கூட எதிர்வரும் 21-ம் நூற்றாண்டில், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படலாம். இப்போதே, நமது உயிரணுவில் உள்ள 23 குரோமோசோம்களில் நான்கு கோடியே பத்து இலட்சத்திற்கும் அதிகமான கேரக்டர்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த குரோமோசோம்களை, அணுவை பிளப்பதுபோல், பிளக்க முடியும் என்று கருதப்படுகிறது. இந்த கேரக்டர்கள் எனப்படும் இயல்புகள் நமது முன்னோர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் பல்வேறு விதமான நடத்தைகள், உணர்வுகள், உளப்பாங்குகள் ஆகியவற்றின் பதிவுகளாகவும், இயற்கையின் வழங்கும் மனிதப் பரிணாம வளர்ச்சிப் பதிவுகளாகவும் இருக்கலாம். பிறப்பும் இறப்பும் பிறப்பு என்பது ஒரு மர்மம் இல்லை. இதேபோல் இறப்பும் ஒரு மர்மம் இல்லை. ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு மர்மம் உள்ளது. இதனால்தான், "ஒரு தாய், பால் குடிக்கும் தனது குழந்தையை ஒரு முலையிலிருந்து, இன்னொரு முலைக்கு மாற்றும் இண்டவெளியே மரணம்" என்றார் மகாகவி தாகூர். மரணத்திற்குப் பிறகு எதாவது நிகழுமா? அல்லது நிகழாதா? அப்படி நிகழ்ந்தால் அது எப்படி இருக்கும்? என்று நினைப்பதே ஒரு ஆன்மீகத் தேடல்தான். கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை என்பதால், ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படப்போகும் மரணத்திற்குப் பின்னான புதிரை கண்டறிய முயற்சிக்கின்றனர். சக்தியை மாற்ற முடியுமே, தவிர அழிக்க முடியாது என்பது விஞ்ஞான விதி. இது மனித உடலுக்கும், அதன் இயக்கத்திற்கும் பொருத்தமாகக்கூட இருக்கலாம். இந்தப் பின்னணியில் என்னுடைய கதைகளை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு எந்தக் கால கட்டத்தில் எழுதினேன் என்பதையும் நினைவில் வைத்துக்