பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 69 டைரக்டர் பதவி கிடைக்கவில்லையானால். எந்த நாக்கில் வேல் குத்துகிறேன் என்று சொன்னானோ பழனிச்சாமி அவன் தங்களை நாக்கில் நரம்பில்லாமல் திட்டுவான். எந்த சபரிமலைக்கு வருவதாக வாக்களித்திருக்கிறானோ பெருமாள் அவனுக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லையென்றால் ஐயப்பா! நீ பொய்யப்பா! என்று நீங்கள் செய்த பழைய அருட்பாலிப்புகளை மறந்து திட்டுவான். அதோடு இந்த இரண்டு ஆசாமிகளும் உங்களுக்கு வாக்களித்ததுபோல் நடப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? போனவருடம். சி.பி.ஐ. வழக்கில் சிக்கிய பழனிச்சாமி. வழக்கில் விடுபட்டால் தங்களை செந்துளில் வந்து சந்திப்பதாய் சொன்னான். வந்தானா? இதேபோல் இந்த பெருமாள் - போன பிரமோஷனுக்கு சபரிமலை வருவதாக சபதம் செய்தான். வந்தானா? போதும் நாரதா, ரிஷிமூலம். நதி மூலம். பக்த மூலம் பார்க்கக்கூடாது.' 'நான் எதற்குச் சொல்கிறேன் என்றால், பிரபுக்களே! உங்கள் பக்தர்களில் ஒருவனுக்கு டைரக்டர் வேலை கிடைத்தால் உங்களை நினைக்கவே மாட்டான். மேலி டத்து ஆட்களுக்கு குட்டி புட்டி கொடுத்ததால் கிடைத்ததாக நினைப்பான். உங்களால் காட்டும் கற்பூர ஜோதியில் நம்பிக்கை வைப்பதாய் கூறும் இந்த பழனிச்சாமியும். பெருமாளும் இப்போதும் மேலிடத்திற்கு பாட்டில்களை கொடுத்து வருகிறார்கள். உங்களைப் போற்றும் பாடல்களைவிட அவர்களுக்கு பாட்டில்களில் நம்பிக்கை அதிகம்.' கிடைத்தால் மறத்தல். கிடைக்காவிட்டால் திட்டல்' என்ற ஒரே சுயநலக்காரர்கள். இவர்களைவிட, உங்களை நினைக்காத திட்டாத நாயகம் எவ்வளவோ மேல் இல்லையா? தெய்வங்களாகிய உங்களிடம் போலித்தனம் செய்யும் இவர்களைவிட, மனிதர்களிடம் மெய்யான ஈடுபாடு காட்டும் இந்த நாயகம். நல்லவன் அல்லவா? b _نانے