உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



70

பக்த கேடிகள்


ஊழியர்களை ஒன்று திரட்டி. சங்கம் அமைத்து, அவர்கள் கஷ்ட நஷ்டத்தில் பங்கு கொள்ளும் இந்த விநாயகத்திற்கு எவ்வளவோ வேலைகள். பொறுப்புக்கள். உங்களைப் பற்றிச் சிந்திக்க அவனுக்கு நேரம் இல்லை. இதை தாங்கள் தப்பாக கருதலாகாது. ஆனால் பக்த கேடிகளோ .

'நாரதா பக்தர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்கிறாய். எங்களுக்கு கெட்ட கோபம் வரும்.

'நான் அப்படிச் சொல்லவில்லை பிரபுக்களே! பக்தர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று சொல்லவில்லை. அயோக்கியர்களும் பக்தர்களாய் இருக்கிறார்கள் என்றே கூற வந்தேன், ஆகையால்.

போதும் நாரதா. நீ எங்களையும் நாத்திகர்களாக்கும் முன்னால், அல்லது மானுடன் நாயகத்தின் பக்தர்களாய் மாற்றும் முன்னால் நாங்கள் நட்போடு போகிறோம்.

அப்படியானால். இந்த டைரக்டர் பதவி.

"நீயே தீர்மானம் செய்துகொள்ளலாம். சரிதானே ஐயப்பா!'

"சரியேதான். அதோடு இந்த புராண உபன்யாசர்களும் இப்படிப்பட்ட பேர்வழிகளும்தான் நம்மைப் பற்றி கட்டுக்கதைகளை மக்களிடையே பரப்பி நம்மை கொச்சைப் படுத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள, இந்த மானுடன் நாயகத்தைப் போல் நமக்கென்று ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளலாம்:

முருகன், சரி என்பதுபோல் தலையாட்டுகிறான். எ திரும் புதிருமாக நின்ற ஐயப்பனும், முருகனும் ஒன்றுபட்டுச் செல்கிறார்கள்.

எப்போதுமே கலகங்களை ஏற்படுத்தும் நாரதர் இப்போது ஒரு கலகத்தைத் தீர்த்து வைத்த திருப்தியோடு சிரிக்கிறார்.

தாமரை—செப்டம்பர், 1986.