பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 அப்பரும்-அப்பாவும் 'அம்மாவுக்கு ஒன்னைவிட யாரும்மா முக்கியம்? அப்படியே போலீஸ் மூலமாய் கோர்ட்டுக்குப் போய், நீ வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி, தோல்வியை விட மோசம்மமா. ஆமாம்மா. ஒரு பெண்ணோட பேரு நல்ல விதமாக்கூட அடிபடக்கூடாதுன்னு நினைக்கிற சமுதாயம் இது ஒன் பெயர் பேப்பருல வந்தால், நீ ஒரு போராட்டக்காரின்னு படிக்கிறவன் நினைப்பான். ஆனால், ஒன்னைக் கட்டிக்க வாரவன் அப்படி நினைக்கமாட்டான். நீதான் ஏதோ செய்யக்கூடாத தப்பைச் செய்ததாய் நினைத்து ஒடிப்போயிடுவான். அப்புறம் நீ அந்த மணிமேகலை மாதிரி காலமெல்லாம் கன்னியாய்.... இப்பவாவது புரியுதாம்மா!" இசக்கியா பிள்ளை, அபிராமி அந்தாதியை அங்கும் இங்குமாய் ஆட்டியபடியே ஒட்டுக் கேட்டார். மகளுக்கு, அம்மா சொல்வது புரிந்துவிட்டதுபோல் தோன்றியது. அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அபிராமிவல்லி அவள் மூலம் அவளுக்கு உபதேசித்து விட்டாள். "அம்மா தாயே! தயவே. என் மகளுக்கு நல்ல புத்தியைக் கொடு." இசக்கியா பிள்ளை, அந்த அந்தாதியின் ஒரு பகுதியைப் ப டி த் து வி ட் டு , நா ைள வி ட் ட இ டத் தி லி ரு ந் து தொடர்வதற்காக ஒரு மல்லிகைப்பூவை, படித்த-படிக்காத பக்கங்களுக்கு இடையில் வைத்துவிட்டு, தேவராத் திரட்டை எடுத்து வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டனை ஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில் ஒசைப் பிழையின்றி அட்சர சுத்தமாய்ப் பாடினார். பாடிக் கொண்டே இருந்தார். பிறகு அப்பர் அருளிய பகுதிக்கு வந்தார். "நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்." வெளியே இப்போது அஞ்ச வைப்பது போன்ற வார்த்தைப் பிளிறு கள்..... இந்திரா, ஏதோ ஒரு