பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 81 நாற்காலியை உடுக்காக்கி, கட்டில்மேல் அடித்தடுத்தி ஒலி எழுப்பி ஊழிக் கூத்தாய்- காளிக் கூத்தாய் சாடிக் கொண்டிருந்தாள். .ெ பண் ைம க் கு க் க ள ங் க ம் வ ர க் கூ டா து என்கிறதுக்காகப் போராடுற என்மேல் களங்கம் நினைக்கிற எந்தப் பயலும் எனக்கு வேண்டாம். கல்யாணம் என்கிறது ஒருத்தனோட சம்மதத்தில் மட்டுமில்லை. ஒருத்தியோட சம்மதத்துலயும் இருக்குது என்கிறதை மறந்துடாதீங்க அத ஏதோ. ஒருத்திக்கு ஒருத்தன் கொடுக்கிற சலுகை இல்லே. நல்லவனோட கல்யாணம் நடக்கணும் என்கிறதுக்காக அயோக்கியனுக்கு அஞ்சி, ஒடுங்கி இருக்கப்படாது. அந்தப் பிரின்ஸிபால் பயலுக்குக் கொடுக்கிற பாடத்தைப் பார்த்துட்டு, அவனை மாதிரியான பயல்களெல்லாம் பெட்டிப் பாம்பாய் ஆகணும்!" . "நான் எதுக்குச் சொல்லுதேன்னால்." "சத்தியத்தைத் தேடுறதுதான் மெய்யான பக்தின்னு டியூஷனுக்கு வார பிள்ளைங்ககிட்டே காசு வாங்கிட்டுக் கத்த மட்டுந்தான் ஒங்களுக்குத் தெரியுமா? ஒருத்தன், ஒரு பெண்ணோட வரம்பை மீறும்போது, அந்தப் பெண் தன்னோட வரம்பை அடக்கிக்கிட்டு இருக்கறதுதான் தமிழ்க்கற்பா குப்பையில போடுங்க கொண்டு." "நீ இப்போதான் இளமையின்." நாலு நாளைகுள்ள நான் கி ழ வி யா ய் ஆயிட்டேம்மா. சரி. எப்படியோ தொலையுங்க! காலமெல்லாம் நான் கூனிக்குறுகியே கிடக்குறேன்? அவன் தொட்ட இந்தக் கைக்கூட ஏதோ விபத்துல விழுந்துட்டாலும் அவன் தந்த விபத்த என்னால் மறக்க முடியுமா? வலியவனைக் கண்டு அவனோட வம்பையும் பொறுத்துக்கிட்டு மெலியவர் இருக்கிறதுதான் நியாயமுன்னு அநியாயமாய் பேசுறீங்க... ஓர் அநியாயத்தை