பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘உன் வாழ்வு தீமை நிறைந்ததாகும். அழகைக் காட்டினேன், அதையே நாடினாய். அறத்தை மறைத்து வைத்தேன், அதை அலட்சியம் செய்தாய். பாபங்களுக்கு வழிபாடு செய்தாய். தீயவழி நிற்பதில் வெட்கமடையவில்லே!’ என்று கடவுள் கூறினர்.

‘ஆம், அவ்விதமே நடந்தேன்’ என்று மனிதன் மறுமொழி கூறினன்.

மறுபடியும் கடவுள் மனிதனுடைய ஜீவிய ஏட்டைத் திறந்தார்.

‘உன் வாழ்வு தீமை நிறைந்ததாகும். நன்மை செய்தோர்க்குத் தீமை செய்தாய். உணவு தந்த கைக்கு ஊறு செய்தாய். உனக்கு அமுதளித்த தனங்களை உதாசினம் செய்தாய். காதல்கொண்டு வந்தவர்க்குக் காமம் அளித்தாய் !’ என்று கடவுள் கூறினர்.

‘ஆம், அவ்விதமே நடந்தேன்’ என்று மனிதன் கூறினன்.

கடவுள் மனிதனுடைய ஜீவிய ஏட்டை மூடிவிட்டு,

‘சரி, உன்னை நரகத்துக்கு அனுப்புவேன் !’ என்று கூறினர்.

87