பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'நன்மை செய்தால் -'

இரவு நேரம்-தன்னந் தனியாக இருந்தார். அதோ பெரிய நகரத்தின் வாயில், அதை நோக்கி நடந்தார்.

அருகே வந்ததும் அங்கே நடைபெறும் ஆனந்தகக் கூத்தையும், சந்தோஷச் சிரிப்பையும், வாத்தியங்களின் இன்னிசையையும் கேட்டார். கதவைத் தட்டினார். காவலர் திறந்தனர்.

சலவைக் கல் மாளிகை, தூண் தோறும் தோரணம், எங்கும் தீவர்த்தியின் ஜோதி. மாளிகைக்குள் நுழைந்தார்.

கண் கவரும் பல மண்டபங்கள் கடந்து விருந்து மண்ட்பம் வந்து சேர்ந்தார். ரோஜாக்கள் விரித்த வெல்வெட் மெத்தையில் சாய்ந்திருந்த ஒருவனைக் கண்டார். அவன் வாய் மதுவால் சிவந்திருந்தது.

அவன் பின் சென்று, மெதுவாகத் தோளில் கை வைத்து, 'அப்பா, ஏன் இவ்விதம் வாழ்கிறாய்? என்று கேட்டார்.

அந்த இளைஞன் திரும்பினான், யார் என்று கண்டுகொண்டான். நான் குஷ்டரோகியா யிருந்தேன். தாங்கள் குணப்படுத்தினீர்கள். நான் வேறு எவ்விதம் வாழ வேண்டுமோ?' என்று கூறினான்.

மாளிகையை விட்டு வெளியே வீதிக்கு வந்தார். ஆடை ஆபரண அலங்கிருதை ஒருத்தியைக் கண்டார். வேடன் போல இளைஞன் ஒரு

90