பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வன் அவள் பின்னல் வந்தான். அவன் கண்களில் காமத் தீ எரிவதைக் கண்டார்.

விரைந்து சென்று அவன் கையைப் பிடித்து, அப்பா, இந்தப் பெண்ணே ஏன் பார்க்கிறாய்? அதுவும் இந்த விதமாக?' என்று வினவினர்.

இளைஞன் திரும்பினான், யார் என்று கண்டு கொண்டான். நான் குருடனா யிருக்தேன், தாங்கள் கண்கள் தங்தீர்கள். வேறு எதை நான் பார்க்கவேணுமோ? என்று கூறினன்.

அந்த மங்கையை அணுகி, ‘அம்மா, உனக்கு இவ்வழி தவிர வேறு வழியில்லையோ? என்று வினவினர்.

அவள் திரும்பினாள், யார் என்று கண்டு கொண்டாள். ‘என் பாவங்களை மன்னித்தீர், இதுதானே இன்ப வழி?’ என்று கூறி நகைத்தாள்.

ஊருக்கு வெளியே சென்றார். சாலை ஓரம் உட்கார்த்து அழும் ஓர் இளைஞனைக் கண்டார். அவனிடம் சென்று, அவன் தலையில் கை வைத்து, ‘அப்பா, நீ ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டார்.

இளைஞன் தலையைத் தூக்கினன், யார் என்று கண்டுகொண்டான். ‘நான் இறந்து போனேன், தாங்கள் எழுப்பினீர்கள். நான் அழாமல் வேறு என்ன செய்வது?’ என்று கேட்டான்.

ஆஸ்கர் ஒயில்ட்

91