பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

X

ஹரீந்திரநாத சட்டோபாத்யாயர் - (பிறப்பு 1896)

ஜீவந்தராயுள்ள இந்தியக் கவிவாணர். தீவிர அபேதவாதி. முன்னால் பழைய பாணியைப் பின்பற்றி அநேகம் பாடல்கள் இயற்றியிருக்கிறார். ஆனால், சமீப காலத்தில் இவர் பாடும் பாடல்கள் நெருப்பைக் கக்கிக் கொண்டு வருகின்றன. அவ்வளவு உணர்ச்சி நிறைந்திருக்கும்.

ஹூட் (1799 - 1845)

ஆங்கிலக் கவிஞர். அனைவரும் போற்றும் ஹாஸ்ய மணி. இலக்கிய உலகில் இளகிய மனதுடையோரில் ஒருவர். இவருடைய 'ஷர்ட்டின் பாடல்' அதற்குத்தக்க சான்று.

கோரி (1828 - 1892)

ஆங்கில ஆசிரியர்.

சார்லஸ் மாக்கே (1814 -1889)

ஸ்காட்லாந்து தேசத்துக் கவிஞர். உற்சாகம் அளிக்கும் பாடல்களேப் பாடுவதில் கீர்த்தி பெற்றவர். 'அப்பா வருகிறார்!’ என்பதில் காதல் அமுதை நிறைத்து வைத்திருக்கிறார்.

ஜான் லட்விக் ரூனிபெக் (1804 - 1877)

பின்லந்து தேசத்தில் பிறந்தவர். ஸ்வீடிஷ் பாஷையின் பிரதான கவிஞரில் ஒருவர். இவருடைய கவிகள் பின்லந்து, ஸ்வீடன் ஆகிய இரண்டு தேசங்களையும் ஒன்றாய் இணைக்க முயன்றன.

ஷெல்லி (1792 - 1822)

ஆங்கில மகா கவிகளில் ஒருவர். அதி அற்புதமான பாடல்களைச் செய்தவர். சுதந்திரத்தில் அனவிலாத் தாகங் கொண்டவர். ஒரு சமயம் கடலில் உல்லாசமாய்த் தோணியில் போய்க் கொண்டே கீட்ஸ் என்னும் கவிஞரின் பாடல் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது புயல் வந்து, தோணி கவிழ்ந்து உயிர் துறந்தார்.