பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உன் குரல் காற்றில் கலங்க கானாமுதம் போல இருப்பதற்காக அன்று; உன் விஜயம் கீழ்த் திசையில் காணும் அருணோதயம் போல இருப்பதற்காகவும் அன்று;

நீ பாட்டோடும் நடனத்தோடும் வருகிறாய் என்பதற்காக அன்று, உன் பாதங்கள் வசந்த மாருதம் போல் மின்னுவதற்காகவும் அன்று;

உன்னிடம் உதிக்கும் நறுமணத்திற்காகவும் அன்று;

உன் வாசஸ்தலம் வீரர்கள் பெருமாட்டிகள் நடுவே என்பதற்காக அன்று;

சலவைக் கல் முற்றத்தில் செய்-சுனைகளின் இசை கேட்டு நிற்கிறாய் என்பதற்காக அன்று;

சாந்த எண்ணங்களும் தவறில்லாத பேச்சுக்களும் உன் தோழமையா யிருப்பதற்காக அன்று;

விசாலமான மாளிகைகளில் மலர்களிலும் மதுக் கலசங்களிலும் நீ தங்கியுள்ளாய் என்பதற்காக அன்று;

மரணத்தைக் கண்டு நீ அஞ்சுகிறாய் என்பதற்காகவும் அன்று, நீ சிறுகுழந்தையாயிருக்கிருய் என்பதற்காகவும் அன்று.

ஆனால், நீ பூமியினின்று எழுந்து, அரக்கன் போல் வானுற வளர்ந்து எனக்குப் பயங்கரமாய்த் தோன்றுவதால்;

நீ பூமியில் இருளையும் - மின்னலையும் நிறைத்து என்னிடம் வரும் பொழுது நான்

93