பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



xiv

லான்டார் (1775-1864)

ஆங்கில ஆசிரியரும் கவிஞருமான இவர் கிரீக், லத்தீன் நடையைத் தழுவி எழுதியவர். தத்துவ உண்மைகளைச் சித்திரிப்பதில் சமர்த்தர்.

லாரன்ஸ் ஆல்மா டாடிமா

ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான இவர், கிரீஸ் தேசத்தின் மகிமையைக் காட்டும் சித்திரங்கள் வரைந்து புகழ்பெற்ற ஸர் லாரன்ஸ் ஆல்மா டாடிமாவின் குமாரி. குழந்தைகளுக்கான பாடல்கள் அநேகம் அழகாகப் பாடியுள்ளார்.

'லின்ட்ஸே சீமாட்டி (1750-1825)

ஸ்காட்லந்து தேசத்தினர். இவருடைய 'காதலும் மணமும்' பல ஆசிரியர்களாலும் போற்றப்படும் கீதம்.

லூயி மாரிஸ் (1832-1907)

வேல்ஸ் தேசத்துக் கவிஞர். டெனிஸன் என்னும் ஆங்கில மகாகவியைப் பின்பற்றி எழுதியவர். லயன்ஸிலும் கவிதை காண முயன்றவர். தொழிலாளர் துன்பங்கள் குறித்து 'இறந்தோர் உலகம்’ என்னும் காவியத்தில் பாடுகின்றார்.

லே ஹண்ட் (1784-1859)

ஆங்கிலக் கவிஞரும் கட்டுரையாளருமான இவர் பத்திரிகைத் தொழில் நடத்தியவர். அரசனைக் கண்டித்ததற்காகச் சிறைவாசம் பெற்றவர். கீட்ஸ், ஷெல்லி, பைரன் போன்ற கவி சிரேஷ்டர்களின் நண்பர். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பார். 'ஜென்னி முத்தம் தந்தாள்' என்னும் பாடல் இதற் குசி சான்று பகரும்.

வால்ட் விட்மன் (1819-1892)

அமெரிக்க மகா கவிகளில் ஒருவர். அமெரிக்க ஜனநாயகக் கவிஞர் என்றும் கூறுவர். ஆங்கில யாப்பிலக்கணத்தை விட்டு, அவராகப் புதியதோர் கவிநடையை வகுத்துக் கொண்டார். அதன் மூலம் சோகம் உற்சாகம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் எழுப்புவதில் சமர்த்தர்.