பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



III

மகள் கூப்பிடத் தந்தை வருகிறார்,

ஆம் தாயும் வாசலுக்கு வருகிறாள்.

விரைந்து வருகிறாள் - மனத்தில் கலக்கம் -

நடையில் பதற்றம் - குழலில் குலைவு !

IV

"கடிதமா? சீக்கிரம் திற - சீக்கிரம் திற !

ஒகோ, இது நம் மகன் எழுதியதா ?

ஆனால் கையொப்பம் அவனுடையதே !

ஒகோ, அவனுக்காக யாரோ எழுதியுளர் ! '

V

ஐயோ, அல்லலுறும் அன்னையின் ஆன்மாவே!

அவள் கண்முன் அனைத்தும் சுழல்கின்றன !

முக்கிய மொழிகளே காதில் பாய்கின்றன.

வாசகம் முழுதும் கேட்க ஆற்றாள்.

'குதிரைப் படைச் சண்டை -

குண்டுக் காயம் மார்பில் -

வைத்திய சாலையில் - அசெளக்கியம் -

ஆனல் குணம் விரைவில் ! '-
 
தாயின் முகம் வெளுத்துவிட்டது ;

தலையில் மயக்கம், கதவோடு சாய்கிறாள்.

2