பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI

அம்மா ! அங்ஙனம் அயராதே !'-

அழுதுகொண்டே மகள் கூவுகிறாள்.

சிறு குழந்தைகள் மெளனங் கொண்டு

மதிமயங்கிச் சூழ்ந்து நின்றன.

'அம்மா ! இதோ பார் !

பீட்டர் விரைவில் குணமடைவான்

என்று கடிதம் கூறுவதைக் கேள் !’

VII

ஐயோ, ஒருநாளும் அவன் குணமடையான் !

வாசற்படியில் வருந்தி நிற்கும் பொழுதே

அவன் வைத்தியசாலையில் இறந்துவிட்டான்!

ஒரே மகன் - உயிர் துறந்துவிட்டான் !

VIII

ஆனால் இனி அன்னை குணமடைய வேணுமே !

பகலில் உணவு தொடுவதில்லை,

இரவில் தூங்குவதில்லை,

அல்லும் பகலும் அழுவாள், ஏங்குவாள் !

'இறைவா ! எவரும் அறியா வண்ணம்

வாழ்வி னின்றும் வெளியேறி

என் அருமை மகனைத் தேடி

அவனோடு இருக்க அருள்வாய் !'

என்று கடவுளை இறைஞ்சி உருகுவாள்.


3