பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தாயின் சோகம்

I

தாய் அழுதாள், தங்தை பெருமூச்சு விட்டான்,

பையனோ - மகிழ்ச்சி ததும்பி

'நாளை நிலக்கரிக் கனிக்குச் செல்வேன்' என்றான்.

II

வீட்டில் தங்கான் - வெளியே போனான்,

வாலிபர் வயோதிகர் எல்லோர்க்கும் சொன்னான்.

செய்தியை ஊர் முழுவதும் பரப்பினான்,

ஆனந்தத்தில் ஆடினான், பாடினான் !

III

அவனுடைய நண்பர்கள் வந்தனர்.

சிலர் ஆச்சரியம் போர்த்து நின்றனர்,

சிலர் யோசனை கூறினர், சிலர் புகழ்ந்தனர்,

சிலர் பொறாமையால் ஸ்தம்பித்து விட்டனர்.

IV

'அபாயம் வராமல் ஆண்டவன் காக்க !'

என்று பாட்டிமார் வாழ்த்தினர்.

தந்தை கையால் முகத்தை மறைத்துப் பெருமூச்சு விட்டான்;

தாய் மறுபுறம் திரும்பி அழுது நின்றாள்.

ஜோஸப் ஸ்கிப்ஸி

8