பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தை மகாராஜா

I

குழந்தை மகாராஜா

அரியாசனத் தமர்ந்து,

தனிக் குடைக் கீழ்

அரசு செய்கிறார் !

II

அவர் அரியாசனம் எது?

அன்னையின் மெல்லிய மடி.

அவர் தவிர யாரும்

அதில் அமர முடியாது.

III

அவர் அரசு எது ?

அன்னையின் இதய கமலம்.

அது முழுதும் அவருக்கே சொந்தம்,

அங்கே அரச பக்தி ததும்பும்.

IV

அவர் சட்டங்கள் அனைத்தும்

தெய்விக மானவை,

அவ்வளவு சுலப மானவை,

அன்பு மய மானவை.

லாரன்ஸ் ஆல்மா டாடிமா

9